தனது டாக்டர் மகளுக்கு.. கணவரை வலைவீசி தேடிப்பிடித்த எல்.கே.சுதீஷ் - யார் இந்த "அகில் ரவிக்குமார்"?

மருத்துவப் படிப்பை முடித்துள்ள தனது மகள் ஜானு ஸ்ரீயை எம்பி சுதீஷ் கட்டுமானத் தொழிலதிபரான அகிலன் ரவிக்குமாருக்கு திருமணம் செய்து வைப்பது...
Janu Sri Sudhish Wedding
Janu Sri Sudhish Wedding
Published on: 
Updated on: 
2 min read

தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், திரைப்படத் தயாரிப்பாளருமான எல்.கே. சுதீஷின் மூத்த மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த (ஆக 30) தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. ஓசூரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான அகில் ரவிக்குமாரை அவர் திருமணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜானு ஸ்ரீயை மணக்கவுள்ள அகில் ரவிக்குமார் யார், அவரது குடும்பப் பின்னணி என்ன, அவர் என்ன தொழில் செய்து வருகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எல்.கே. சுதீஷ் - பூர்ண ஜோதி சுதீஷ் தம்பதியரின் மூத்த மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷுக்கும், ஓசூரைச் சேர்ந்த தொழிலதிபர் துட்டுக்குறி ரவிக்குமார் - ராதா ரவிக்குமார் தம்பதியரின் மகன் அகில் ரவிக்குமாருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணம் வரும் (நவம்பர் 22) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய நாளான நவம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு அதே இடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Janu Sri Sudhish Wedding
Janu Sri Sudhish Wedding

அகில் ரவிக்குமார், தொழிலதிபர் துட்டுக்குறி ரவிக்குமார் - ராதா ரவிக்குமார் தம்பதியரின் மகன். லண்டனில் முதுகலைப் பட்டப்படிப்பான எம்.எஸ்சி. (MSc) படிப்பை முடித்துள்ள இவர், தனது தந்தையுடன் இணைந்து கட்டுமானத் துறையில் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் அகில் ரவி இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Akhil Ravi Infra Projects Private Limited) மற்றும் டிஆர்கே இன்ஃப்ராகான் எல்எல்பி (DRK Infracon LLP) ஆகிய நிறுவனங்களின் இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Janu Sri Sudhish Wedding
Janu Sri Sudhish Wedding

அரசியல் மற்றும் திரையுலகப் பின்னணி கொண்ட எல்.கே. சுதீஷின் குடும்பத்தில் நடைபெறவுள்ள இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மருத்துவப் படிப்பை முடித்துள்ள தனது மகள் ஜானு ஸ்ரீயை எம்பி சுதீஷ் கட்டுமானத் தொழிலதிபரான அகிலன் ரவிக்குமாருக்கு திருமணம் செய்து வைப்பது அரசியல், திரையுலகம் மற்றும் தொழிலதிபர் வற்றங்களிடையே கவனம் பெற்றுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com