“காலில் ஏற்பட்ட வலி” - காவலர் அடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு..முழு உடல் பரிசோதனை செய்த அஜித் குமாரின் தம்பி!

நடத்தி மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர்
“காலில் ஏற்பட்ட வலி” - காவலர் அடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு..முழு உடல் பரிசோதனை செய்த அஜித் குமாரின் தம்பி!
Admin
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் நகை திருடி விட்டார் என்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது போலீசார் அடித்ததால் உயிரிழந்த அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் தற்போது உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அஜித் குமாரை விசாரணை நடத்திய அதே சமயம் நவீன் குமாரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அடித்தது குறிப்பிடத்தக்கது, எனவே தற்போது போலீசார் அடித்ததால் தான் நவீனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை நடத்தி மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நவீன் குமார் எந்த பாதிப்பும் இல்லை காலில் வலி ஏற்பட்டதால் முன் எச்சரிக்கையாக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது என நவீன் குமாரின் மாமா தெரிவித்துள்ளார்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com