கனவில் வந்து பிசினஸ் ஐடியா கொடுத்த முனியாண்டி சாமி!உலகை வலம் வரும் 'முனியாண்டி விலாஸ்' வரலாறு

பிரபலாமன முனியாண்டி விலாஸுக்கு பின்னால் ஒருவரின் கனவில் வந்து வழிகாட்டிய காவல் தெய்வம் இருக்கிறது என்றால் வியப்பாக உள்ளது.
முனியாண்டி விலாஸ்
முனியாண்டி விலாஸ்
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் என்றால் அறிந்திராதவர்கள் யாருமில்லை. இந்த பெயருக்கும் அதன் பிண்ணனியிலிருக்கும் ஒரு காவல் தெய்வம் வீற்றிருக்கும் கதை தெரியுமா?உங்களுக்கு...

முனியாண்டி விலாஸ் பேரைக் கேட்டாலே கோழி குழம்பு, வஞ்சரம் வறுவல், மட்டன் பெப்பர் சாப்ஸ் என வாய் ஊறும். ருசியிலும் உபசரிப்பிலும் பெயர் பெற்ற இந்த பெயர் கொண்ட உணவகங்கள் தமிழகம் மாட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பெயர் பெற்றதாக விளங்குகிறது. இந்த அளவிற்கும் பிரபலாமன முனியாண்டி விலாஸுக்கு பின்னால் ஒருவரின் கனவில் வந்து வழிகாட்டிய காவல் தெய்வம் இருக்கிறது என்றால் வியப்பாக உள்ளது.

வீரமும், ஆவேசமும் நிறைந்த.தெய்வமான, முனீஸ்வரர் . சிவபெருமானின் பரிவாரங்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். காக்கும் தெய்வமான இவர் சிவன் முகத்திலிருந்து வெளிப்பட்ட ஏழு வடிவங்களில் ஒருவர் என புரணங்கள் தெரிவிக்கின்றன.

காவல் தெய்வமான, முனீஸ்வரரை, முனி, முனியாண்டி, முனியப்பர், முனியன் என, பல பெயர்களில், கிராம மக்கள் அழைத்து வழிபடுவதோடு, தங்களின் குல தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.

முனி என்ற சொல் புராணங்களில், தெய்வ ஆவேசம் படைத்தவர் எனும் அர்த்தத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முறுக்கிய மீசையோடு கையில் அறுவாளோடும் காட்சி தரும் இவர், வானுக்கும் பூமிக்கும் ஒளிப்பிழம்பாக காட்சி தருவார் என்றும் மனிதனோடு மனிதனாக வாழ்பவர் எனவும் நம்பப்படுகிறது. தவறு செய்தால் தலையை அறுப்பார் என்றும் கிராம மக்களால் கூறப்படும் நிலையில் இவர் பயிர்களைக் காப்பதாகவும், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவதாகவும் போற்றப்படுகிறார்.

அப்படி பட்ட காவல் தெய்வமான முனியாண்டி சாமிக்கு 400 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வடக்கம்பட்டியில் கோவில் அமைத்து தொடந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மூலவர் முனியாண்டி சுவாமி காட்சித்தருவதோடு, கருப்பையா சுவாமி மற்றும் முத்தையா சுவாமி போன்ற தெய்வங்களும் காட்சியளிக்கின்றனர். இதுவே மதுரை வீரனின் மூலக்கோயிலாவும் கருதப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு சமயம் விவசாயம் பொய்து போன நிலையில் பிழைப்புத்தேடி அலைந்த வடக்கம்பட்டி கிராமத்தினைச் சேர்ந்த சுப்பா நாயுடுவின் கனவில் வந்த முனியாண்டி சாமி, ”அன்னம் விற்று பிழைப்பு நடத்துக" என்று அருள் வழங்கியுள்ளார். இதனையடுத்து அவர் காரைக்குடியில் 1935ல் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் முதன்முதலாக உணவகம் ஒன்றை தொடங்கினார்.. அதுமுதல் தமிழகம் மட்டுமில்லாது உலகளவில் 2000 க்கும் மேற்பட்ட கடைகள் முனியாண்டி விலாஸ் என்ற பெயரோடு இயங்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா

ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் நடக்கும் திருவிழா உளகளவில் பிரசித்து பெற்றதாக விளங்குகிறது. காரணம் அன்றைய தினம் தமிழகம் எங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களின் உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டி, வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் வருகை தந்து ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் திருவிழா நாளில் பெண் பக்தர்கள் பலரும் தங்களது இல்லங்களிலிருந்து எடுத்து வந்த தேங்காய், பழம், பூந்தட்டுகளைத் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சாமிக்குத் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர்.

பின்னர் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்த 200 ஆடுகள், 300 சேவல்களை நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். இதனையடுத்து ஆடுகள் கோழிகள் முனியாண்டி சாமிக்கு முன் பலியிடப்பட்டு பின் அந்த கறிகளை கொண்டு .பிரியாணியாகச் சமைத்து, திருமங்கலம், கள்ளிக்குடி, வடக்கம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த உணவினை பிரசாதமாக வழங்குகின்றனர்

வடக்கம்பட்டி சுப்பா நாயுடு கண்ட கனவு .இன்னைக்கு உலகத்தையே மட்டன் பிரியாணி வாசனையில திணறடிச்சுக்கிட்டு இருக்கு! 'அன்னம் விற்றுப் பிழை'னு முனியாண்டி சாமி கொடுத்த அந்த ஒற்றை ஐடியா, இன்னைக்கு ஆயிரக்கணக்கான ஹோட்டல் ஓனர்களின் தலைவிதியையே மாற்றியுள்ளது., அடுத்த முறை நீங்க முனியாண்டி விலாஸ் போயி வஞ்சரம் வறுவலையும், சூடான மட்டன் பெப்பர் சாப்ஸையும் சேர்த்து ஒரு கட்டு கட்டுறீங்கன்னா... மறந்துடாதீங்க, நீங்க சாப்பிடுறது வெறும் மதிய உணவு இல்ல, சாமி விட்ட பக்தியின் 'ஹை-டெக்' பிரசாதம் என்று.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com