“மு. க ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்” - பேசுபொருளானா சத்தியபாமா உருவ கேலி விவகாரம்.. திமுகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு !

சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அவரை மக்கள் இப்போது ‘பெட்டி பாமா’ என்று...
MK Stalin Sathyabama Remarks
MK Stalin Sathyabama Remarks
Published on: 
Updated on: 
2 min read

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் நேற்று(அக் 02) தாராபுரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார் . அப்போது தமிழக வெற்றி கழக வேட்பாளரை விமர்சித்த அவர் “ஒருவரிடம் பெட்டி பெட்டியாக பணத்தை திணித்ததால் உங்கள் மீது இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. பெட்டியை கொடுத்தது யார் பெட்டியை வாங்கியது யார் என்று உங்களுக்கே தெரியும். இன்னொன்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ‌ உங்கள் வரிப்பணத்தில் தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5 மாதம் முன் நீங்கள் அளித்த ஓட்டு செல்லாதது என மாற்றிய துரோகிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

துரோகத்தை முறியடிப்பது மட்டுமல்ல உங்களுக்கு விஸ்வாசமானவருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு வந்துள்ளேன். அவர் அடிப்படையில் வழக்கறிஞர். அதனால் சட்டமன்றத்தில் உங்களுக்காக வாதாடுவார். உங்களிடம் பெற்ற வாக்கை யாரிடமும் விலை பேச மாட்டார். இதற்கு காரணமானவர் யார் என சிந்திக்க வேண்டும். சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அவரை மக்கள் இப்போது ‘பெட்டி பாமா’ என்று அழைக்கிறார்கள் இன்னொரு பெயர் உள்ளது. பல்டி பாமா எப்படி அந்த உருவத்தை வைத்து பல்டி அடித்தார் என தெரியவில்லை” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் அவர் சத்தியபாமாவை உருவ கேலி செய்ததாக சிலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் காலையில் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஸ்டாலின் பேச்சுக்கு தற்போது முதலமைச்சர் “தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் திருமதி சத்தியபாமா குறித்து அவதூறாகப் பேசிய தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வன்மையானக் கண்டனம்! தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் தீயசக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களின் உருவம் குறித்து, மிகவும் அநாகரிகமாக, நக்கலாகப் பேசி, சிரித்து, புலங்காகிதமடைந்து, தாம் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

பெண்களைத் தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையானக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதை கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்த தீய சக்தி கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியை கொடுக்கத்தான் போகின்றனர்.” என அறிக்கை வெளியிட்டு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com