மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா விவகாரம்..! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நீதிமன்றம்!!

சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் ....
madhampatty-rangaraj-joy-crizildaa
madhampatty-rangaraj-joy-crizildaa
Published on
Updated on
1 min read

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக்கோரியும்,

சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிறிஸ்டில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஜாய் கிரிடில்டாவின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். அவற்றை புறக்கணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார்.

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப தடை விதிக்கக் கோரி சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி செந்தில் குமார், சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com