யார் கையில் வெற்றி? தொடங்கியது தபால் வாக்கு எண்ணிக்கை.. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அடுத்தடுத்து வெளியாகும் முடிவுகள்!

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது....
யார் கையில் வெற்றி? தொடங்கியது தபால் வாக்கு எண்ணிக்கை.. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அடுத்தடுத்து வெளியாகும் முடிவுகள்!
Published on: 
Updated on: 
1 min read

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தை ஆளும் தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளதால், இரு தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 2 மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், விவிபாட் (VVPAT) இயந்திரங்களில் சேகரிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டுகள் தனியாக எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருமான வீரப்பன், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com