"தபால் வாக்கு முதல் 5-வது சுற்று வரை.." - தொடர்ந்து முன்னிலையில் தவெக! வாகை சூடுவாரா மரகதம் குமரவேல்?

மதுராந்தகத்தில் இன்று காலை முதலே அதாவது, தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தவெக முன்னிலையில் இருந்து வருகிறது.
Madurantakam by-election results 2026
Madurantakam by-election results 2026
Published on: 
Updated on: 
2 min read

மதுராந்தகத்தில் 5-வது சுற்றிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது. மதுராந்தகத்தில் தற்போது 24, 008 வாக்குகளை பெற்று மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட பரந்தாமன் 15,769 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கணிதா சம்பத் 14,112 பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து கொண்டார். இவர் மட்டுமின்றி தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமாவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்து கொண்டார். அதனால், இந்த இரு தனி தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தவெக சார்பில் ராஜினாமா செய்த அதே MLA-களை அந்த தொகுதிகளில் நிற்க வைத்ததோடு, மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். தாராபுரத்தில், தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இன்று (அக் 09) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மதுராந்தகத்தில் 5-வது சுற்றில் தவெக முன்னிலையில் உள்ளது. தற்போது வரை மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், அந்த தொகுதியில் தவெக தலைவர் விஜய் மாமண்டூரில் தொடங்கி, சுமார் 45 கி.மீ. தூரம் பயணித்து மக்களை சந்தித்து மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மக்களோடு மக்களாக டீ அருந்தியும், விவசாயி ஒருவரின் வயலுக்கு சென்று அங்கு அவரின் டிராக்டரை ஓட்டியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு தவெக-வின் பிரச்சாரமே ஓங்கி நின்றது.

மதுராந்தகத்தில் இன்று காலை முதலே அதாவது, தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தவெக முன்னிலையில் இருந்து வருகிறது. தனது இடத்தை தவெக தற்போது வரை முன்னிலையில் தக்கவைத்துள்ளது. தற்போது 5-வது சுற்று எண்ணிக்கையில் கூட தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பரந்தாமன் இரண்டாம் இடத்திலும், கணிதா சம்பத் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க தாராபுரத்தில் நிலைமை தலைகீழாக இருந்த நிலையில் தற்போது அது மாறியுள்ளது. காலை 10.40 வரை அதிமுக முன்னிலையிலும், தவெக இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாவது இடத்திலும் இருந்தது. ஆனால், அதன் பிறகு மீண்டும் தான் விட்ட இடத்தை தவெக மீண்டும் பிடித்துள்ளது. தாராபுரத்தில் காலை முதல் தவெக முன்னிலை வகித்து வந்த நிலையில் அதிமுக முதலிடத்தை பிடித்து அசரவைத்தது. ஆனால், தற்போது மீண்டும் தவெக 13,285 வாக்குகள் பெற்று முன்னிலையில் வந்துள்ளது. இந்த நிலை தாராபுரத்தில் தொடர்ந்து நீடிக்குமா? என்றும், தாராபுரம் போல மதுராந்தகத்திலும் கடைசி நேரத்தில் ஏதேனும் அதிசயம் நிகழுமா? என்றும் அல்லது மதுறந்தகத்தில் முன்னிலையில் இருக்கும் தவெக வெற்றி வாகை சூடுமா? என்று பல கேள்விகளோடு மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com