“மக்களுடன் ஸ்டாலின் திட்டம்..” உங்கள் தேர்தல் யுக்திகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்.. -தமிழிசை சௌந்தர் ராஜன் ஆவேசம்..

ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதன் மாநில பொறுப்பாளர் என்ற முறையில் ....
tamilisai soundarrajan
tamilisai soundarrajan
Published on
Updated on
2 min read

தேர்தலுக்காக உங்களுடன் ஸ்டாலின் மக்களுடன் ஸ்டாலின் என எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க.மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

“ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதன் மாநில பொறுப்பாளர் என்ற முறையில் இந்த  கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன்.

பிரதமர் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தது உற்சாகத்தை தந்தது. 

தமிழகத்தில் சோழ மன்னனை பொருமைப்படுத்திட வந்த ஆன்மீக தமிழனை தமிழனாக ஏற்றுக் கொள்வதில்லை. ராஜேந்திர சோழனும் தமிழன் தான். அவரது  சாதனைகள் எல்லாம் தமிழனின் சாதனை தான். மோடி பேசும் கீழடி பற்றியும்  பேசியுள்ளார்.. கீழடியை யாரும் மறைக்கவில்லை. கீழடி அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்கப்படும். பிரதமர் வருவதை பெருமையாக கருதாமல் இருப்பது வேதனையாக         இருக்கிறது. இது இளைஞர்களுக்கு புரிந்து இருக்கும். தமிழனை பாராட்ட போற்ற தான் பிரதமர் மோடி வந்தார்.

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏன் பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதிமுகவும் - பா.ஜ.க.வும் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது. தலைவர்கள் ஆளாளுக்கு  ஒரு கருத்து இருக்கலம். மோடி, அமித்ஷா பல மாநிலங்களில் வெற்றி கண்டவர்கள். பல மாநிலங்களில் வெற்றி பார்முலாக்களை ஏற்படுத்தியவர்கள். ஊழல் செய்தவர்கள் அல்ல. நேர்மறையாக அரசியல் செய்பவர்கள். இதனால் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. பலர் பல கருத்துகளை சொல்லாம். மறைமுகமாக திமுகவுடன் கூட்டணி என்று சொல்லி கொள்ளலாம். பா.ஜ.க.- அதிமுக பலமான கூட்டணியாக இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் பரிதவித்து கொண்டு இருக்கிறார்கள். மாற்றம் ஏற்பட வேண்டும். 

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி இணைந்தாலும் மிகப்பெரிய கூட்டணி தான். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் பிறந்த குழந்தைகளை தரையில் படுக்க வைக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் உள்ள வசதி போல் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்துங்கள் என்று சொல்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறுகின்றனர். சாலையில் செல்ல முடியாது என்பதால் ரயிலில் செல்கிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான வசதிகள் கிடைக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஒருபோதும்  ஒப்புக் கொள்ள முடியாது. பூதக் கண்ணாடி வைத்து மற்ற மாநிலங்களை பார்ப்பதை விட தமிழ்நாட்டில் நடப்பதை பார்க்க வேண்டும். 

14 ஆயிரம் செவிலியர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று திராவிட மாடல் குறித்தும். துணை முதல்வர் கருத்து குறித்தும் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள். 

காங்கிரஸ் நிலைமை போல் பாஜக இல்லை.  பாஜக ஆளும் மாநிலங்களில் அங்கீகாரம் தந்து உள்ளனர். காங்கிரஸ் தான் பரிதவித்துப் போய் உள்ளது.  செல்வ பெருந்தகை என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிக்  கொண்டு இருக்கிறார். 

தேர்தலுக்காக தான் மகளிர் தொகையை வழங்க உள்ளனர். 2 வருடம் கழித்து தான் வழங்கினார். 2 வருட பணத்தை சேர்த்து தந்து இருக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் மக்களுடன் ஸ்டாலின் என எல்லாமே தேர்தலுக்காக தான். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். பல மருத்துவமனைகள் திறந்து பாதியாக தான் இயங்குகிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com