ராட்டினதிலிருந்து தவறி விழுந்த நபர்…! உயிர் காக்கும் கருவிகள்.. அடிப்படை வசதிகள் இல்லாத பொருட்காட்சி திடல்!!

அவசர உதவி மருத்துவ உதவி உள்ளிட்ட உயிர் பாதுகாப்பு வசதிகள் இன்றியும் ...
man fell from giant wheel
man fell from giant wheel
Published on
Updated on
1 min read

சங்கரன்கோவில் பொருட்காட்சியில் பிரேக்கிங் டான்ஸ் ராட்டினம் ஆடிய நபர் கீழே விழுந்து தலையில் படு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பொட்டலில் ஆடித்  திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வந்த பொருட்காட்சியில்  பிரேக்கிங் டான்ஸ் ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்த கருப்பசாமி என்பவர் தவறி விழுந்து தலையில் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு  தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் அவசர உதவி மருத்துவ உதவி உள்ளிட்ட  உயிர் பாதுகாப்பு வசதிகள் இன்றியும்  பொது மக்களுக்கு தேவையான கழிப்பிட வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் பொருட்காட்சி திடல் இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

எந்தவித அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாமல் இயங்கி வந்த பொருட்காட்சி திடலுக்கு மக்கள் தொடர்பு துறை அலுவலகம் மற்றும் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள் எனவும்   சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த மாதிரியான மோசமான நிலையில் நடக்கும் பொருட்காட்சி திடலுக்கு மக்கள் போவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com