"ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்", அமைச்சர் சாமிநாதன்!

 "ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்", அமைச்சர் சாமிநாதன்!
Published on
Updated on
1 min read

திருப்பூரில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் சாமிநாதன், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும், மேகதாது அணைகள் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ஒன்றியம் பொங்கலூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் கலந்து கொண்டார். 

அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த தமிழக முதல்வர் அந்த மாநில முதல்வரிடம் கல்லாறு நல்லாறு ஆனைமலை ஆறு திட்டம் குறித்து கோரிக்கை மனு ஒன்றை வைத்துள்ளார். இதன் மூலம் இந்த திட்டமானது விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

பில்லூர் அத்திக்கடவு திட்டத்தில் தடுப்பணை கட்டி துடியலூர், சூலூர், பல்லடம், பொங்கலூர் பகுதிகளுக்கு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்று பெருமிதமாக கூறிய அமைச்சர் மேலும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணைகள் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தி மேட்டூரில்  தேவையான தண்ணீரை கேட்டு பெற்று பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஊரிய தண்ணீர் கிடைக்க திராவிட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com