ஈபிஎஸ் திமுகவுடன் சேர நினைத்து வரலாற்று பிழை செய்துவிட்டார். மக்கள் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து திமுக செயல்பட்டது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றசாட்டு. அதிமுகவுடன் தோழமையாக நாங்கள் இருப்போம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அயோத்திதாசரின் 181 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அயோத்திதாசர் பண்டிதரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் முதல்வர் விஜய். மேலும் தவெக-வை சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ் மோகன், ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுக தனது கொள்கைகளை இழந்து, மத சார்பற்ற கொள்கையில் இருந்து விலகி மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி சேர்ந்து ஈபிஎஸ்-க்கு வாக்கு செலுத்தினால் அது பாஜக-விற்கு ஆதரவாக அமையும். அதிமுகவின் பொதுசெயலாளர் இல்லை மாறாக டெல்லிதான் அக்கட்சியின் தலைமையாக இருக்கிறது என்று இந்த தகவலை நோக்கியே பிரச்சாரம் செய்தார்கள்.
ஆனால் தேர்தல் முடிவடைந்த உடன் திமுக தனது கொள்கைகளை மறந்து மக்களுக்கு எதிரான ஒரு அரசை உருவாக்க நினைத்தார்கள். அதனால் ஜனநாயக சக்திகள் எல்லோரும் இணைந்தோம், மேலும், சி. வி. சண்முகம் அங்கிருந்து வெளியே வந்தது, பதவிக்காக இல்லை" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். மேலும் பேசிய அவர், மு. க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி ஆகிய மூன்று பெரும் சேர்ந்துதான் கூடி பேசி குதிரை பேர அரசியலை பேசியதாக குற்றம் சாட்டினார். திமுகவிற்கு எதிராக புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதாவால் உருவாக்கபட்ட அதிமுக காப்பாற்றப்படவேண்டும் என்றும் அவர் பேசினார். இத்தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய் சமூக நீதி அடிப்படையில் இயக்கி வருகிறார் என்றும் அவர் பேசினார். மேலும், தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என்று முதல்வர் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து மறுத்த நிலையில், அதிமுகவின் மற்றொரு அணியாக இருக்கும் எஸ்.பி. வேலுமணி, சி. வி. சண்முகன் ஆகியோர் திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக கூறினர். தற்போது அதே கருத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தெரிவித்திருக்கிறார். முன்னதாக தவெக குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றச்சாட்டினை முன்வைத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.