"சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு போடுகிறார்கள்" மத்திய அரசை குற்றம் சாட்டிய அமைச்சர்!!

"சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு போடுகிறார்கள்" மத்திய அரசை குற்றம் சாட்டிய அமைச்சர்!!
Published on
Updated on
1 min read

திருச்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்களுக்கு அமலாக்க துறை மூலம் மத்திய அரசு நெருக்கடிகள் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளாா். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியில், கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது "ஒன்றிய அரசு எப்படிபட்ட நெருக்கடி எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவீர்கள். சிறப்பான செயல்பாட்டின் மூலமாக ஒட்டு மொத்த இந்தியாவில் நம்பர் 1 முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர் தான் என்று தமிழ்நாட்டில் உள்ள நமது கட்சி பேப்பர் சொல்லவில்லை. வடநாட்டில் உள்ள பத்திரிக்கை தமிழக முதல்வர் தான் நம்பர் 1 முதல்வர், தமிழகம் தான் நம்பர் 1 மாநிலம் என்று சொல்கின்றது" என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

மேலு, "வடநாட்டு பத்திரிகை, தமிழ்நாட்டு முதல்வர் தான் நம்பர் 1 பத்திரிகை என்று வெளியிட்டால், என்றால் ஒன்றிய அரசு சும்மா விடுவார்களா. இதுக்கெல்லாம் காரணம் யாரு? தமிழ்நாடு முதலமைச்சர் தானே, சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்கள் தானே. சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்கள் யார்? அவங்க மேல ஏதாவது வழக்கு போடுங்க, ஏதாவது ஒன்றின் மூலமாக அமலாக்க துறையை வந்து தொந்தரவு கொடுங்க. அப்போது தான் தமிழ்நாடு முதலமைச்சர் நம்பர் 1 முதல்வராக வர மாட்டார் என்று ஒன்றிய அரசு முடிவு செய்து பல நெருக்கடியை தருகின்றது" என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

மேலும், அடக்கு முறைகளை கடந்து வந்த இயக்கம் திமுக. ஒரு கிளை செயலாளர்கள் கூட இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய இயக்கம் திமுக, எனவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com