“அமைச்சராக இருந்தும்.. மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை” - அமைச்சர் சரத்குமார் வேதனை! பணியை செய்ய விடாமல் தடுப்பது யார்?

அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டாலும் அதை தடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்
minister sarathkumar
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சரத்குமார் தையல் மிஷின்கள், அரிசி மூட்டைகள் மற்றும் ஹாட் பாக்ஸை பொதுமக்களுக்கு வழங்கிய பின் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது அமைச்சராக இருந்து வரும் நிலையில் என் தாம்பரம் தொகுதி மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். தாம்பரம் தொகுதி MLA வாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பணிகளை தடுத்து நிறுத்துவதால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டாலும் அதை தடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தான் மாமன்ற உறுப்பினர்களாகவும், கவுன்சிலராகவும் இருக்கிறார்கள். அவர்களை மீறி எதுவும் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் ஏதாவது சொல்லி அதிகாரியை செய்ய வைத்தால், அதிகாரியை திருப்பி அனுப்புகின்றனர். ஏனென்றால் தற்போது உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அதை தடுத்து நிறுத்துவதாகவும், மக்கள் எங்களை தான் கவுன்சிலராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் எனக்கூறி பணிகளை தடுத்து நிறுத்துவதாகவும், வேதனை தெரிவித்தார். அதிகாரிகளையும் வேலை செய்ய விடுவதில்லை நம்ம கட்சியினர் போனாலும் அதில் என்ன அரசியல் செய்யலாம் என்றும் இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார். தெடர்ந்து பேசிய அவர் “வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அவர்களை தோற்கடித்து முதல்வர் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com