

திமுக-விற்கும் தவெக-விற்கும் X தளப்பக்கத்தில் மிசா குறித்த காரசார விவாதங்கள் இன்று காலை முதலே தொடங்கிவிட்டது. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுகவின் ஊழல் என்று சர்க்காரியா கமிஷன் பற்றியும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மிசா கைது குறித்தும் சரமாரி கேள்விகளை முன்வைத்தும், அதனை விமர்சித்தும் சட்டப்பேரவையில் பேசியிருந்தார் முதல்வர்.
இதனால், சட்டப்பேரவையின் இறுதி நாளில் மிகப்பெரிய அமளி ஏற்பட்டதை தொடர்ந்து திமுகவினர் சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க சபா நாயகரிடம் கோரினார். சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, சபாநாயகர் அவைக்காவலர்களை வரவழைத்து திமுகவினரை வெளியே அனுப்பினார். இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதானதை குறித்து பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் சைகை ஒன்றினை செய்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது.
முதல்வரின் இந்த சைகைக்கு அரசியல் வட்டாரத்தில் பலரும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று காலை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மிசா சிறை வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும், 2026 தேர்தலுக்கு பிறகு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற சென்ற நிகழ்வினையும் நினைவு கூர்ந்தார் மு.க. ஸ்டாலின். இன்று காலை அவரது காணொளி வெளியாகிய நிலையில், தவெக ஐடி விங் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் "பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?. எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை. உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன. கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி" என்று பதிவிட்டிருந்தனர்.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் தற்போது திமுக ஐடி விங், "எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான். வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள். மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?. பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்?".
"மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!. Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?. முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு!.
ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான். நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு. கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.
இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள். வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள். காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள் என்ற பதிவினை பதிவிட்டதோடு, மிசாவின் மு.க. ஸ்டாலின் கைதானது குறித்த ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். தற்போது, அடுத்த "தவெக சார்பில் என்ன பதில் வரும்?" என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலையில் இருந்து மாறி மாறி சமூக வலைத்தளத்தில் இவர்கள் கட்டமான கேள்விகளாலும் விவாதத்தினாலும் துளைத்த வண்ணம் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்