திமுகவில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ...!புதிய உறுப்பினர்களை  சேர்க்கும் முகாம்...!

திமுகவில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ...!புதிய உறுப்பினர்களை  சேர்க்கும் முகாம்...!
Published on
Updated on
1 min read

கடலூர் | காட்டுமன்னார்கோவில் நகராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு மற்றும் தி.மு.க. பவள விழா நடைபெற்றது. இதில் பிற  கட்சியை சேர்ந்த பெண்கள் பலர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர் . 


கருணாநிதி நூற்றாண்டு மற்றும் தி.மு.க. பவள விழாவை முன்னிட்டு  திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள் இணைக்கும் பணியானது ஏப்ரல் 3 ஆம் தேதி  முதல் தொடங்கி   ஜூன் 3 ஆம் தேதி வரை   அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக கடலூர்  மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உடன்பிறப்புகளால் இணைவோம்   என்ற தலைப்பின் கீழ் பவள விழா நடைபெற்றது.மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  4வது மற்றும் 17 வது வார்டுகளை சேர்ந்த அதிமுக, தேமுதிக உள்பட மாற்றுகட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.அப்போது அக்கட்சியின் பொறுப்பாளர் பரந்தாமன் மற்றும் நகர செயலாளர்  கணேச மூர்த்தி ஆகியோர்  கட்சியில் புதிதாக இணைந்த பெண்களுக்கு சால்வை அணிவித்தும், வரவேற்றும் பேசினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com