MLA பதவியை ராஜினாமா செய்தார் M.R விஜயபாஸ்கர்! அடுத்தடுத்து உடையும் அதிமுக.. விஜயுடன் கைகோர்க்க முடிவா?

அதிமுக கட்சியில் உட்பூசல் இருந்துவந்த நிலையில், 5 MLA-க்கள் தங்களது பதவியை ராஜினாமா
M R Vijayabhaskar
Published on
Updated on
1 min read

கரூர் MLA எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே அதிமுக கட்சியில் உட்பூசல் இருந்துவந்த நிலையில், 5 MLA-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக MLA-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெக-வில் இணைவது தொடர்கதையாகி வருகிறது. மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெக-வில் இணைவார் என்று எதிர்ப்பிற்கப்படுகிறது. இதுபோன்று கட்சியில் இருந்து வெளியேறுவது அதிமுகவினை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், மதிமுக-வின் பொது செயலாளரான வைகோ, 2 MLA-களையும் பதவி விலக சொல்லிவிட்டு, இடைத்தேர்தலில் அவர்களுக்காக தானே வந்து பிரச்சாரம் செய்வதாக முதல்வர் விஜய் கூறியதாக பொதுக்குழு கூடத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இதுவும் ஒரு பெறமாகவே பார்க்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 41 ஆக குறையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் இடங்கள் 7ஆக உயர்ந்துள்ளது. மேலும், உட்கட்சியில் இருந்த பூசல்களும், அதிர்ப்திகளுமே இதற்கு கரணம் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுமே அடுத்த ஒரு தேர்தலை அதிமுக சந்திக்கும்? அதில் அதிமுக வெற்றிபெற வாய்ப்பிருக்குமா? என்ற கேள்விகளோடு பயணிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த காரணங்களால் கீழ்நிலை உறுப்பினர்கள் பலரும், தவெக போன்ற மாற்று கட்சியினை நோக்கி செல்கின்றனர்.

மேலும், திமுகவும் - அதிமுகவும் கூட்டணியில் ஆட்சியமைக்கப்போவதாக தேர்தல் முடிந்த சமயத்தில் வந்த சில செய்திகளும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகள் தவெக கட்சிகளுமே சலசலப்புகளை உண்டாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்டகாலமாக ரசிகர் மன்றம் முதல் தவெக-வின் கட்சி பனி வரை நீண்டகாலம் வேலைசெய்தவர்களுக்கு பதவி வழங்காமல் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி என்று கொடுக்கும் போது அது கட்சிக்குள்ளையே சலசலப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

எம். ஆர். விஜபசகரின் ராஜினாமா கடிதம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகள் குதிரை பேரம் என்று கூறுவது உண்மையாகிறதா? என்ற கேள்வியும் தற்போது அரசியல் வட்டாரத்தில் சசலக்கப்படுகிறது. மேலும், அதிமுகவை சேர்ந்த 2 விஜயபாஸ்கர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com