
என் மகன் உயிரோடு இருந்திருந்தால் கலெக்டர் ஆகியிருப்பான், சாலை விபத்தில் உயிரிழந்து தேர்ச்சி பெற்ற பிளஸ் டூ மாணவனின் தந்தை பேட்டி.
என் மகன் உயிரோடு இருந்திருந்தால் கலெக்டர் ஆகியிருப்பான் என சாலை விபத்தில் உயிரிழந்து தேர்ச்சி பெற்ற பிளஸ் டூ மாணவனின் தந்தை பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்த கண்ணன் - சித்ரா தம்பதியின் மகன் முகேஷ், (17). முகேஷ் சத்திரக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பிளஸ் டூ தேர்வு எழுதி இருந்தார். ஏப்ரல் 8 -ஆம் தேதி மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியனேந்தல் என்ற இடத்தில் டூவீலரில் சென்றபோது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவில் 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து முகேஷின் தந்தை கண்ணன் பேசுகையில்,
“எனது மகன் ஏப்ரல் 8 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். தற்போது வெளிவந்த பிளஸ் டூ தேர்வு முடிவில் 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். எனது மகன் உயிரோடு இருந்திருந்தால் மேற்படிப்பு படித்து கலெக்டர் ஆகி இருப்பான். அவன் இல்லாமல் ஒரு தூணை இழந்ததைப் போல் உள்ளது” என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். முகேஷின் தாய் சித்ரா மகனின் பள்ளி சான்றிதழ்களை பார்த்து கதறி அழுத சம்பவம் அருகில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்