
முருகர் மாநாடு
நாளை ஜூன் (22) -ஆம் தேதி இந்து சங்க பரிவார அமைப்புகள் “முத்தமிழ் முருகர் மாநாடு” என்ற மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளது. அதற்க்கான ஏற்பாடுகளை சில தினங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. இந்த மாநாட்டில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள், இதில் பங்கேற்கின்றனர். மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என சொல்லப்படுகிறது.
அமித்ஷா சொல்வது என்ன!
தமிழ்நாட்டில் தங்களுக்கான வெற்றியை பதிவு செய்ய “தக்ஷன் விஜய்” என்ற திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் கணிசமான அளவு மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என்றும் நம்பப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில் “பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். மேலும் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை கவனத்தில் கொண்டு முழு வெற்றியை அடைய முயலுங்கள்” என சொல்லி விட்டு சென்றார்.
குறுக்கே வந்த விஜய்!
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக -விற்கு தமிழ்நாட்டில் போட்டியிட 20 இடங்கள் வழங்கப்பட்டன. அதில் தென் வழிக்கதிக்ரு 8 சீட்டுகள் கொடுக்கப்பட்ட நிலையில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே அவர்களுக்கு கடந்த தேர்தலின் எண்ணைக்கையின்படி ஒரு 80,000 ஓட்டுகள் இருக்கின்றன. அதில் திமுக எதிர்ப்பு வாக்குகளும் அடங்கும், அது ஒரு 20,000 ஓட்டுகள் என்று வைத்துக்கொண்டாலும், அந்த ஓட்டுக்களை அடைய தற்போது விஜய் வந்துவிட்டார். விஜய் -ன் அரசியல் பிரவேசம் ஏற்கனவே பலமுறை சொன்னது போல, பல பிரதான கட்சிகளின் ஓட்டுக்களை உடைக்க வல்லது. அதனை அமித்ஷா நன்கு அறிந்ததால்தான் தென் மாவட்டங்களை குறிவைத்து அரசியல் செய்கிறார்.
மேலும் மத அரசியல்தான் பாஜக -வின் அடிப்படை கொள்கை என்பது உள்ளங்கை நெல்லிக்காய் மாதிரி. மகாராஷ்டிராவில் விநாயகர், மேற்கு வங்கத்தில் துர்க்கை, உ.பி -யில் ராமர், ஒடிசாவில் பூரி ஜெகன் நாத் என அவர்கள் அந்தந்த மாநில மார்பு தெய்வங்களை தங்களதாக்கி அரசியல் செய்வது வழக்கம் தான். ஆனால் இந்த போக்கு எந்த அளவுக்கு வெற்றி வாய்பிற் உயர்த்தி கொடுக்கும், வஜிஹ்நாட்டில் எதுக்கய்யா மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தல் நெருங்க நெருங்கதான் தெரியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.