“சுக்குநூறான சீமானின் கனவு” - தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாத மக்கள்.. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி பெரும் பின்னடைவு!

தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரபு, 7,136 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
NTK seeman
NTK seeman
Published on
Updated on
1 min read

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். முதலமைச்சர் வேட்பாளர் தனது தொகுதியில் பின்னடைவில் இருப்பது என்பது பெரும் ஆச்சரியத்திற்குரியதாக உள்ளது. சீமான் 4,610 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். அந்த தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரபு, 7,136 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தவெக வேட்பாளர் பிரபுவுக்கும் நாம் தமிழர் சீமானுக்கும் 13640 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

அரசியலில் நடிகர் விஜய்யின் அறிமுகம் மற்றும் கட்சி தொடக்கம் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதேபோல் தற்போது ஒரு தொகுதியில் கூட நாதக முன்னிலை பெறவில்லை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 177 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை தக்க வைத்தனர். மேலும் 30,41,717 (6.6%) வாக்குகள் பெற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு அடுத்து தனித்துவமான வாக்குகளை பெற்றிருந்தார்.  ஆனால் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் சவாலையும், கடும் போட்டியும் ஏற்படுத்தியுள்ளது விஜய்யின் தவெக. பெரும்பான்மையான தொகுதிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது திமுக. 

முதல்வர் வேட்பளர்களில் விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தங்களது தொகுதிகளில் வலுவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகின்றனர். எனவே இந்த தேர்தல் பெரும் ஆச்சரியத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஒரு சததவீதத்திற்கும் கீழ் செல்லும் நிலை நிலவுவதாக தெரிகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com