

தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை துவங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி நவம்பர் நான்காம் தேதி துவங்கியது.
தகுதிவாய்ந்த வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதை உறுதிசெய்யவே , வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நகல் உள்ளீடுகள் நீக்கப்படும். இப்போது மொத்தமாக வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டு உள்ளது. நீங்கள் அதிகாரிகள் தரும் ஆவணங்களை நிரப்பி கொடுத்தால் மட்டுமே உங்கள் வாக்காளர் லிஸ்ட் உறுதி செய்யப்படும்.
தகுதிவாய்ந்த வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதை உறுதிசெய்யவே , வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நகல் உள்ளீடுகள் நீக்கப்படும். இப்போது மொத்தமாக வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டு உள்ளது. நீங்கள் அதிகாரிகள் தரும் ஆவணங்களை நிரப்பி கொடுத்தால் மட்டுமே உங்கள் வாக்காளர் லிஸ்ட் உறுதி செய்யப்படும்.
சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்
புதிய வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 14,25,018 வாக்காளர்களின் பெயர் நீக்கபட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 பேரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், 89,241 பேரும் நீக்கம். சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில், 1,27,521 பேரும் குறைந்தபட்சமாக ராயபுரம் தொகுதியில் 51,711 பேரும் நீக்கபட்டுள்ளனர்.
இன்று முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்ப்பதத்கு படிவங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் சிறப்பு முகாமும், தேவையைப் பொறுத்து அடுத்தடுத்து முகாம்களும் ஏற்பாடு செய்யப்படும் உணவு கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4ம் தேதி தொடங்கி இருமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த 14 -ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த வாக்காளர் சிறப்பு தீவிர செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் முடிவடைந்து நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னையின் வாக்காளர் எண்ணிக்கை!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் முடிந்த பின்னர் சென்னை மாவட்டத்தில் 12,47,690 ஆண் வாக்காளர்களும், 13,31243 பெண் வாக்காளர்களும் மற்றும் 743 இதர வாக்காளர்களும் என மொத்தம் 25,79,676 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், 156,555 இறந்த வாக்காளர்கள், 1222164 இடம்பெயர்ந்தோர், 27,328 Absent, 199 இதர இன் வாக்காளர்கள் மற்றும் 18,772 இரட்டை பதிவு வாக்காளர்கள் என மொத்தம் 14,25,018 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தொகுதிவாரியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், எஸ்.ஐ.ஆர்க்கு முன்பாக 2,90,653 பேரும், பின்பாக 1,86,841 பேர் என 1,03,812 பேர் நீக்கப்பட்டுள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், எஸ்.ஐ.ஆர்க்கு முன்பாக 2,40,087 வாக்காளர்களும் எஸ்.ஐ.ஆர்க்கு பின்பாக 1,50,846 வாக்காளர்கள் என 89,241 பேர் நீக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதியில் எஸ்.ஐ.ஆர்க்கு முன்பாக 3,17,520 பேர், பின்பாக 1,89,999 பேர் என 1,27,521 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகர் தொகுதியைப் பொறுத்தவரை 2,80,422 பேர் முன்பாகவும், 1,62,135 பேர் பின்பாகவும் என 1,18,287 பேர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியில் எஸ்.ஐ.ஆர்க்கு முன்பாக 2,85,947 பேர் பின்பாக 1,75,123 என 1,10,824 பேர் நீக்கப்பட்டுள்ளனர். குறைந்தப்பட்சமாக ராயபுரம் தொகுதியில், 51,711 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது, “எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பாக 3,718 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் 361 வாக்குச்சாவடிகளை அதிகரித்து தற்போது 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கிற்கும் நடப்பாண்டு கணக்கிற்கும் வேறுப்பாடு உள்ள 2.37 லட்சம் பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு சேர்க்கப்படுவார்கள்.
இன்று முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்ப்பதத்கு படிவங்கள் விநியோகிக்கப்படும். அதற்காக தற்போது வரை 11 லட்சம் Form 6 படிவங்கள் உரிய அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த இரண்டு நாட்கள் சிறப்பு முகாமும், தேவையைப் பொறுத்து அடுத்தடுத்து முகாம்களும் ஏற்பாடு செய்யப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லையென்றால் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவே அர்த்தம். அவர்களை சேர்ப்பதற்குதான் form 6,7,8 படிவங்கள் அளிக்கப்பட்டு சேர்க்கப்படுவார்கள். வாக்காளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து பெயர் விடுபட்டிருந்தாலும் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இன்று வெளியிடப்பட்டது வரைவு வாக்காளர் பட்டியல்தான். அடுத்ததாக Form 6 அளித்து வாக்காளர்கள் இணைவார்கள். ஜனவரி 18 வரை அதற்கான அவகாசமும் உள்ளது. தேர்தல் ஆணையம், சென்னை மாநகராட்சி, தேர்தல் அலுவலகம் இணையங்களில் இந்த பட்டியல்கள் உள்ளன. சென்னையில் இடம்பெயர்வு காரணமாக அதிக வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளது. ஒரு தொகுதியில் பெயர் இல்லையென்றாலும் அவர்கள் வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரை தொடர்புக் கொண்டு சேரலாம்.
ஒவ்வொரு தொகுதியிலும் நீக்கப்பட்டவர்கள் எதனால் நீக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான உரிய காரணங்கள் தெரிவிக்கப்படும். இணையதளம் வாயிலாகவோ அல்லது தேர்தல் அலுவலகத்திலும், 200 வார்டுகளிலும் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் உடன் அட்டவணை வெளியிடப்படும். அதனைப் பார்த்து பொதுமக்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைந்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.