"உப்பைப் போல.. தமிழை போல.." - 4 நாட்களில் விஜய்யை புகழ்ந்து தள்ளும் நாஞ்சில் சம்பத்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

இடைத்தேர்தல் பரப்புரைக்கு அவரை தவெகவினர் அழைக்காத நிலையில், "என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது.." எனப் பதிவீட்டிருந்தார். இப்போது "தென்றலைப் போல மென்மையான தலைவன்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
Nanjil Sampath Clarifies Rumors, Praises TVK Leader Vijay Within 4 Days after controversial post
"தென்றலை போல மென்மையான.. தமிழை போல உண்மையான.." - 4 நாட்களில் விஜய்யை புகழ்ந்து தள்ளும் நாஞ்சில் சம்பத்
Published on: 
Updated on: 
1 min read

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக அமர்த்தப்பட்டார்.
தேர்தலுக்குப் பிறகு மதிமுக கட்சி, தவெக ஆதரவு எடுத்தபோது நாஞ்சில் சம்பத்தின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்தன. ஏனென்றால் ’வைகோ ஏறுகிற மேடையில் இந்த சம்பத் ஏற மாட்டான்’ எனக் கூறியிருந்தார் அவர்.

இடைத்தேர்தலின் போது தவெகவுக்காக வைகோ பரப்புரை செய்தார். ஆனால் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இல்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதற்கு ஏற்றதுபோல கடந்த அக்டோபர் 4ம் தேதி, "போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது.." எனப் பதிவிட்டிருந்தார் நாஞ்சில் சம்பத்.

இது பெருமளவில் பேச்சு பொருளானது. இந்தநிலையில் தற்போது, "தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள்." என விளக்கம் அளித்துள்ளார்.

அவரது பதிவில், "உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி.

இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!" எனப் பதிவிட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத் மனநிலை 4 நாட்களில் எப்படி மாறியது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Nanjil Sampath Clarifies Rumors, Praises TVK Leader Vijay Within 4 Days after controversial post
கரூர் மருத்துவமனை முதல் கள்ளழகர் கோவில் வரை.. 'மும்மொழி கொள்கை' திணிக்கப்படுகிறதா? திமுக குற்றச்சாட்டும் தவெக பதிலடியும்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com