"போனால் போகட்டும் போடா.." - விவாதத்தை கிளப்பிய நாஞ்சில் சம்பத்தின் X பதிவு! தவெக கட்சியில் இருந்து விலகுகிறாரா?

தவெக தலைமை மீது ஏதும் அதிருப்தியா? அல்லது தவெக-வில் இருந்து விலக போவதற்கு ஏதேனும் 'ஹிண்ட்' கொடுக்கிறாரா?
Nanjil Sampath X post
Nanjil Sampath X post
Published on: 
Updated on: 
2 min read

தவெக-வின் பரப்புரை செயலர் நாஞ்சில் சம்பத் தனது X தளப்பக்கத்தில் நேற்று (அக் 04) திடீரென பதிவிட்ட பதிவானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், அதில் அவர் குறிப்பிட்ட பாடல் வரிகளானது, அவர் தவெக கட்சியில் இருந்து விலகப்போகிறாரா? என்ற கேள்வியையும் அரசியல் வட்டாரத்தில் எழச் செய்துள்ளது.

திராவிட இயக்க பேச்சாளர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் நாஞ்சில் சம்பத். தற்போது இவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவை தேர்தலின்போது தவெக-விற்காக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நாளை (அக் 06) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், அந்த தொகுதிகளிலில் தேர்தல் பரப்புரை செய்யவிருந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

குறிப்பாக நாஞ்சில் சம்பத், தொடக்க காலத்தில் திமுகவில் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அதனை தொடர்ந்து, திமுகவில் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியை வைகோ ஆரம்பித்தார். அப்போது அதில் நாஞ்சில் சம்பத்தும் தன்னை இணைந்து கொண்டார். நாஞ்சில் சம்பத் மதிமுகவில் பல்வேறு பதிவிகளை வகித்து வந்தார்.

இத்தகைய சூழலில் தான் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாஞ்சில் சம்பத், அக்கட்சியில் இருந்தும் விலகி அதிமுகவில் இணைந்து கொண்டார். பின்னர் அக்கட்சியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்து வந்தார். பின்னர், திடீரென அக்கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் எந்த கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் ஊடக விவாதங்களில் மட்டும் பேசிவந்தார். அதன் பின்னர்தான், தவெக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, தனது அதிகாரபூர்வ X தளபக்கத்தில்,

போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது.. என்று நடிகர் சிவாஜி கணேசனின் படத்தில் இடம்பெற்ற பாடலை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது பேசுபொருளானது. மேலும், பரப்புரை செயலரையே பரப்புரையில் இடம்பெற செய்யாததுதான் இந்த பதிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, ஊடக விவாதங்களில் அவர் பேசிய சில விஷயங்கள் கூட சர்ச்சையானதை தொடர்ந்து அவரது பெயர் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகக்கூட அவர் இந்த பதிவினை பதிவிட்டிருக்கலாம் என்றும், தவெக தலைமை மீது ஏதும் அதிருப்தியா? அல்லது தவெக-வில் இருந்து விலக போவதற்கு ஏதேனும் 'ஹிண்ட்' கொடுக்கிறாரா? என்ற பல கேள்விகள் இவரது இந்த ஒற்றை பதிவு தற்போது ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com