

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாராவுக்கு, அவரது கணவரும், புகழ்பெற்ற இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஒரு பிரம்மாண்டமான பரிசை அளித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆம், விக்னேஷ் சிவன் தன் அன்பு மனைவிக்காக சுமார் பத்து கோடி ரூபாய் (₹10 கோடி) மதிப்புள்ள அதிநவீன ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் (Rolls-Royce Spectre) சொகுசுக் காரை வாங்கியுள்ளார். இந்தச் செய்தி இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. பொதுவாகவே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுக்குள் அன்பான பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம் என்றாலும், இந்தக் காரின் மதிப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்தக் காரின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், இது வெறும் ஆடம்பரக் கார் மட்டுமல்ல; உலகிலேயே ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனி முதன்முறையாகத் தயாரித்துள்ள முழுக்க முழுக்க மின்னோட்டத்தில் இயங்கும் வாகனம் (Electric Vehicle) ஆகும். அதாவது, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தாமல், மின்சாரம் மூலமாக மட்டுமே இந்த கார் இயங்கும். எனவே, இது சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. தன் மனைவி சுற்றுச்சூழலுக்கு உகந்த அதே வேளையில், உலகத் தரம் வாய்ந்த ஒரு காரைப் பயன்படுத்த வேண்டும் என்ற விக்னேஷ் சிவனின் எண்ணம்தான், இந்தப் பரிசுக்குப் பின்னால் இருக்கிறது.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரில் பல வியக்க வைக்கும் அம்சங்கள் உள்ளன. இதன் மிக முக்கியமான அம்சம், நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற Roof அமைப்புதான். ஆம், இந்தக் காரின் Roof-ன் உட்புறம், வானில் உள்ள நட்சத்திரங்கள் மெல்லியதாக ஒளி வீசுவது போல ஆயிரக்கணக்கான சிறிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளே அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு, மேகங்களுக்கு மேலே பயணிப்பது போன்ற ஒரு மாயாஜால உணர்வை இது கொடுக்கும். இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவதற்குக் காரணம், இந்தத் தனித்துவமான வடிவமைப்புதான். மேலும், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப, காரின் உட்புற நிறம், இருக்கைகளின் வடிவமைப்பு, மற்றும் சிறுசிறு அலங்காரப் பொருட்கள் என அனைத்தும் பிரத்யேகமாகத் Customized சிறப்பு இந்தக் கார்களுக்கு உண்டு.
மேலும் இந்த கார் சக்தி வாய்ந்த பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளதால், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் வரை பயணிக்க முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.