அதிமுக உடைகிறாதா? தவெக-வை ஆதரிக்க முடிவு! - சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

மீண்டும் புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், தவெக-வை ஆதரிப்பது என்று முடிவு செய்திருப்பதாக சி.வி. சண்முகம் செய்தியாளராகள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதிமுக செய்தியாளர்கள் சந்திப்பு
அதிமுக செய்தியாளர்கள் சந்திப்பு அதிமுக செய்தியாளர்கள் சந்திப்பு
Published on
Updated on
2 min read

இனி வரும் தேர்தல்களில் அதிமுக என்ன செய்யப்போகிறது?, மீண்டும் புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், தவெக-வை ஆதரிப்பது என்று முடிவு செய்திருப்பதாக சி.வி. சண்முகம் செய்தியாளராகள் சந்திப்பில் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் தவெக ஆட்சியமைக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள் அதை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது என்று சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், தேர்தல் முடிந்ததும், கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், கழக பொதுச்செயலாளர் சிலவற்றை முன்மொழிந்தார் என்றும், இந்த கட்சி திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து தொடங்கப்பட்டது மேலும், 52 ஆண்டுகாலமாக திமுகவை எதிர்த்து வருகிறோம். திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்றும், சி.வி.சண்முகத்தை முதலமைச்சராக முன்மொழிந்ததாக அவர் கூறினார். ஆனால் இந்த முடிவிற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த முடிவினை எவ்வாறு இவர்களால் எடுக்க முடிந்தது என்று பேரதிர்ச்சிக்குள்ளானதாகவும் அவர் கூறினார். மேலும், அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதிமுக என்ற கட்சியை மறக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, அதிமுக குழு கூட்டப்பட்டது, அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக கடந்த தேர்தல்களில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், இனி அதிமுக எந்த ஒரு கூட்டணியிலும் இல்லை என்றும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். மேலும் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், அதிமுகவை காப்பாற்றவேண்டும் என்றும் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், தற்போது எந்த கூட்டணியிலும் இல்லாத அதிமுக அரசு தற்போது ஆட்சியமைத்துள்ள தவெக-வை ஆதரிப்பதாக முத்தெடுத்துள்ளதாக கூறினார். அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக கட்சியின் தலைமை நிலை செயலாளர் எஸ். பி. வேலுமணியை நியமிப்பதாக கூறினார். கொறடாவாக விஜய பாஸ்கரையும், துணைத் தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

மேலும், நேற்று தற்காலிக சபாநாயகரிடம் இதுகுறித்த கடிதத்தை கொடுத்ததாகவும் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதுவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவு என்றும் அவர் கூறினார். அதிமுகவின் தொடர் தோல்விக்கு யாரையும் காரணம் கூற விரும்பவில்லை என்றும், ஒட்டுமொத்தமாக எல்லோருமாகவே அந்த தோல்வியை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார். தற்போது இருக்கும் ஒரே கவலையாக இந்த இயக்கம் காப்பற்றப்படவேண்டும் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அதிமுக ஏன் தோற்றது?, எதனால் தோற்றது? என்பது குறித்து ஆலோசிக்க விரைந்து பொதுக்குழுவை கூடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அதிமுக உடைக்கப்படுகிறது என்று சிலர் அவதூறு பரப்புவதாகவும், தங்கள் யாருக்கும் அந்த நோக்கம் இல்லை என்றும், தொடர் தோல்வி குறித்து ஆலோசிக்க பொதுக்குழுவை கூடவேண்டும் என்றும் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com