'அதிரடி காட்டும் முதல்வர் விஜய்!' "அடுத்தடுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்" - அடுத்த கையெழுத்து எந்த திட்டத்திற்கு?

717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு. வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மூடப்படும் 717 மதுபான கடைகள்
மூடப்படும் 717 மதுபான கடைகள் மூடப்படும் 717 மதுபான கடைகள்
Published on
Updated on
1 min read

717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு. வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது. மே 10ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று நேரு உள்விளையாட்டரங்கில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். மேலும், நேற்று (மே 11) சட்டபேரவையில் பெரம்பூர் MLA-வாக தமிழக முதல்வர் விஜய் பதவியேற்றார். மேலும், அவரைத் தொடர்ந்து தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற MLA-க்கள் மற்றும் மற்ற தொகுதிகளில் வெற்றிபெற்ற மற்ற கட்சினர் நேற்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா மற்றும் முதல்வர் விஜய் முன்னிலையில் தங்களது பதவியை ஏற்றனர்.

தற்போது பொதுமக்கள் நலன் கருதி, வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 500 மீட்டர் தொலையவில் உள்ள மதுபான கடைகளை 2 வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது வரை 4765 சில்லறை விற்பனை மதுபான கடைகள் நடத்தி வரப்படுகிறது. இதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள் அருகே உள்ள மதுபானக்கடைகளை ஆராயுமாறு நேற்று முதல்வர் உத்தரவிட்ட நிலையில், தற்போது 717 மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே உள்ள 276 மதுபானக்கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகே உள்ள 255 கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே மதுபான கடைகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில், தற்போது மக்களின் நலன் கருதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து முதல்வர் விஜய் என்னென்ன உத்தரவுகளை பிறப்பிப்பார்? என்றும், என்னென்ன மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டுவருவார்? என்றும் மக்கள் ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com