“கூச்சமே இல்ல.. Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா?” - விஜய்க்கு மு க ஸ்டாலின் பதிலடி! மீண்டும் பேசுபொருளான கரூர் சம்பவம்?

இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் விஜய் - திமுக இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
MK stalin
Published on: 
Updated on: 
2 min read

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்த காரணத்தால் அந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக சார்பில் மீண்டும் மரகதம் குமரவேலை வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதனால், இன்று அவருக்கு வாக்கு சேகரிப்பிற்காக, முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதிக்கு வந்திருந்தார். மதுராந்தகம், அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள மைதானத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் வேட்பாளர் மரகதம் குமரவேலைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேசினார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக குறித்து பல்வேறு கட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்திருந்தார். அதில் மீடனும் திமுகவை தீயசக்தி, மற்றும் பலம் என அதிமுகவையும் சாடியிருந்தார். வீரமணி போக்ஸோ வழக்கு, விர்டூயல் அப்யூஸஷ் மற்றும் இடைத்தேர்தல் குறித்து பேசினார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு க ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக, ஜெம் வீரமணி விவகாரம், கரூர் சம்பவம், பாஜக குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைச் சுட்டிக்காட்டி விஜய்க்கு அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் விஜய் - திமுக இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள். அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? என்றும் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?

அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே? “தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா? 

உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்!

பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். “ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!

இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. 

ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com