தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை பார்க்காத மிக தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழக அரசியல் களம் தற்போது பல கோணங்களாக பிரிந்திருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் ஒரு பக்கமும் எதிர்க்கட்சியான அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கமும் நிற்க, இதற்கு இடையில் தமிழக வெற்றி கழகம் நிற்கிறது.
ஒருவேளை தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவினால் அதிமுக, திமுக, விசிக, காங்கிரஸ், நம் தமிழர், பாஜக என அனைவரின் ஓட்டையும் பாரபட்சமின்றி விஜய் உடைப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலில்தான், திமுக -வின் கூட்டணியில் பெரும் சலசலப்பு தோன்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ் தான் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் வெளியேறாவிட்டாலும் செல்வப்பெருந்தகை சென்றுவிடுவார் போல தெரிகிறது. அடுத்த விக்கெட் சி.பி.எம், விசிக இப்படியாகத் தான் திமுக கூட்டணி உடையும் என்று சொல்லப்படுகிறது. மேலும், திமுக கூட்டணி உடைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன, ஒன்று திமுக வில் பின்பற்றப்படும் ஏற்றத்தாழ்வுகள், மற்றொன்று மிக மிக குறைந்த அளவிலான சீட்டுகளை தருவது.
சமீபத்தில் கூட காங்கிரஸ் தரப்பில், இம்முறை அதிக இடங்களையும், அதிகாரத்தில் பங்கையும் கோருவோம் என சொல்லப்பட்டது. இந்த சலசலப்புக்கு பதில் கூறும் விதமாகத்தான் “என்னுடைய கை என்னை விட்டு போகாது, அதே மாதிரி தான் கையும் நம்மை விட்டு போகாது ஆனால் என்றைக்குமே கை நம்மை விட்டு போகாது என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து சூசகமாக பேசிஇருந்தார்.
காங்கிரஸ் கூட்டணியை விட்டு கிளம்ப உந்து சக்தியாக இருந்தது விஜய் factor -விஜய் புதிதாக கட்சி துவங்கியது மட்டும் அல்லாமல் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தையும் தன்னருகே வைத்துள்ளார், தவெக இருக்கும் நம்பிக்கையில்தான், திமுக -வை எதிர்க்க துணிகிறார்கள் என்பது நிதர்சனம்.
ஆனால் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ரங்கராஜ் பாண்டே பேசுகையில், “திமுக கூட்டணி உடையாமல் யாருக்குமே வெற்றி இல்லை. திமுக உடைந்து விசிக, தவெக, காங்கிரஸ் என்ற நிலை உருவானால் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை” என அவர் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.