

ஏப்ரல் 23 நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை அடுத்து தமிழகத்தில் அரசியல் பரபரப்பாக உள்ளது. அரசியல் கட்சியினர் அனைவரும் தங்களது வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற மன்ற தேர்தல் பிரச்சாரம் இதுவரை இல்லாத ஒரு கோணத்தில் பயணிப்பததாக தெரிகிறது. காரணம் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் மற்ற கட்சியினரை தனிப்பட்ட முறையில் தாக்குவதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். உதாரணமாக எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக வேட்பாளரும் , துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவரின் அரசியல் அனுபவம், அரசியல் வருகை, மற்றும் அவர் மீதான சர்ச்சை கருத்துக்களை குறிப்பிட்டு விமர்சிப்பது என தொடர்ந்து அவரை தனிப்பட்ட விதத்தில் தாக்கி பேசி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈபிஎஸ் குறித்து கடுமையாக பேசி வருகிறார். அடிமை, பாஜக கைக்கூலி அவரின் தலைமை பண்பை தாக்கும் விதத்தில் பேசி வருகிறார். இந்த வார்த்தை போர் சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. போகும் இடமெல்லாம் இதற்கான ஒரு கருத்தை பதிவிட்டு வருகிறார் உதயநிதி. இதை பலரும் எதிர்த்து வருவதாக தெரிகிறது, NDA கூட்டணியில் உள்ளவர்கள் உதயநிதிக்கு எதிராக கண்டன கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த சட்டமன்றத் தேர்தல் 4 முனை போட்டியாக இருக்கும் என பலரும் குறிப்பிடும் வருகின்றனர். காரணம் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வருகை தான் என அனைவரும் அறிவோம். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை உதயநிதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் தவிர்த்து வருவதாக தெரிகிறது. செய்தியாளர்கள் விஜய் குறித்து எழுப்பும் கேள்விகளையும் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் உதயநிதி. விஜய் குறித்து எதிர்க்கருத்தோ அல்லது தவெக குறித்தோ பேசாதது ஏன்? இதை வேண்டுமென்றே செய்கிறாரா உதயநிதி? உதயநிதி, மேடையில் துளிகூட விஜய்யைப் பற்றியோ, தமிழக வெற்றிக் கழகத்தை பற்றியோ விமர்சிப்பதில்லை. இது தற்செயலானது அல்ல; பக்கா ஸ்கெட்ச் என தெரிகிறது. உதயநிதியின் இந்த 'மௌன' உத்தியின் பின்னணியில் காரணங்கள் என்ன?
உதயநிதி, விஜயை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக அங்கீகரித்து அவருக்கு பதில் அளித்தால், அது அவருக்குத் முக்கியத்துவத்தைக் கொடுத்துவிடும் என நினைக்கிறார உதயநிதி. திமுக vs அதிமுக எனும் போட்டி மனப்பான்மையுடன் மட்டும் பயணிக்கிறாரா?
மேலும் இதற்கு முன் இருவரும் திரைத்துறையில் பயணித்தவர்கள், அந்த நட்பை தவிர்க்கவோ அல்லது விமர்சிக்கவோ விரும்பவில்லையா என கேள்விகள் எழும்புகிறது.
அதையடுத்து விமர்சனகருத்து வைத்தால் அது முதல்முறை வாக்காளர்கள் அல்லது விஜய் ரசிகர்களை திமுகவிற்கு எதிராக திருப்பிவிடும் என நினைத்து தவிர்க்கிறாரா என தெரியவில்லை.
மேலும் தமிழக வெற்றி கழகத்தில் பெரும்பாலும் விஜய்யின் சினிமா ரசிகர்களே உள்ளனர். அவர்களின் அரசியல் தெளிவு குறைவு என்றும், அவர்களிடம் ஏன் வீண் வம்பு என்றும் விளக்குகிறாரா உதயநிதி? அதேபோல் விஜய்-யும் 'திமுக ஒரு தீய சக்தி' என எல்லா மேடைகளிலும் ஒரே பஞ்ச் டயலாகை போட்டு வருகிறார், ஆனால் அவரும் உதயநிதி பற்றி எங்கும் குறிப்பிடவோ அல்லது பேசவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தனக்கு எதிராக அதிமுகவை தான் வலிமையான அரசியல் போட்டியாக பார்க்கிறது. அவர்கள் நாம் தமிழர் குறித்தோ, தவெக குறித்தோ பேசாமல் தவிர்த்து வருகிறார்கள். இது அவர்களின் அரசியல் அனுபவத்தை பாதுகாக்கவே ஸ்மார்ட் மூவ் ஆக தெரிகிறது. அதையே தான் எடப்பாடியும் செய்து வருகிறார். விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதிலளித்து கடந்து செல்வது அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது போல் தான் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.