

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, “இந்தியாவை ஒரு ஐக்கிய இந்திய நாடாக மாற்ற வேண்டும்” என்றும் பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான என்.டி.ஆர், ரஜினிகாந்திடம் முன்மொழிந்ததாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் “வட இந்தியர்கள் மட்டுமே நம்மை ஆளுகிறார்கள்... நான் ராஜ்குமார், பிரேம் நசீரிடம் பேசுகிறேன் தமிழ்நாட்டில் இருந்து நீ வந்துடு” என்றும் அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ராஜ்குமார் கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகர் மற்றும் மலையாளத்தில் பிரேம் நசீர் ஆவர். மேலும் “மத்தியப் பிரதேசத்தை தலைநகராக மாற்றி, இந்தியாவை இரண்டாக்கி ஐக்கிய இந்திய நாடாக மாற்றுவோம் நீ வா” என்று ரஜினிக்கு என்.டி.ஆர் அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் பிரதமர்களை சுழற்சி முறையில் மாற்றுவது போன்ற பரிந்துரைகளையும் அவர் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.
இந்த அழைப்பு ‘லிங்கா’ பட ஷூட்டிங்-கின் போது வந்ததாகவும், அதை ரஜினி மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏன் மறுத்தார் என்று கேட்டபோது “நான் அதுக்கு சரியான ஆள் இல்லை” என்று பதிலளித்துள்ளார் ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு முயற்சி நடந்ததாகவும் அந்த முயற்சி ரஜினிகாந்தை மையமாக கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ரஜினியின் அரசியல் களம்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1996-ல் முதன்முறையாக, தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசி கொண்டிருந்தார். ரசிகர்களும் அவருடைய அரசியல் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்போதிருந்து 2017 வரை, அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்கள் ஓயாமல் வந்த வண்ணம் இருந்தன. இருப்பினும், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளில், "நான் அரசியலுக்கு வருவது நிச்சயம்" என்று கூறி அந்த யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின்பு, நடிகர் ரஜினிகாந்த், தற்போது உடல்நலக் கவலைகளைக் காரணம் காட்டி, அரசியலில் இருந்து விலகினார். "மிகுந்த வருத்தத்துடன் நான் அரசியலில் நுழைய முடியாது” என்றும் அறிவித்தார். சமீபத்தில் ஒரு மக்களை இயக்கத்தையும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தொடங்கியிருந்தார்.
தற்போது உள்ள அரசியல் சூழலில் ரஜினிகாந்த் குறித்த இந்த செய்திகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. ரஜினியை மையமாக கொண்டு வந்த ஒரு தேசிய அரசியல் அழைப்பை அவர் மறுத்ததன் காரணம் என்ன? பின்னர் அரசியல் வருகை குறித்து அறிவித்தாரே அப்போது இந்த எண்ணம் இருந்ததா? என்பது போன்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது. இப்போது வரை அவரின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்த வண்ணம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். “காலம் மாறாது காத்திருந்து பதில் சொல்லும்” என்று அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்தொன்று அரசியலுக்கு வரப்போவதாற்கான அறிகுறி என்ற விவாதங்கள் எழுந்தன என்பது குறிபிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்