

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும், யாருக்கு எதிர்ப்பு அலை? மற்றும் பலமுனை போட்டி குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் அவர்கள் மலைமுரசு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு...
நேர்காணலில் இந்த “இடைத்தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும்” என்ற நெறியாளரின் கேள்விக்கு, இடைத்தேர்தல் பலமுனை போட்டியாக இருப்பதால் அது தவெக-விற்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்தார். மலேய திமுக அல்லது அதிமுக ஒரு கட்சி தேர்தலை புறக்கணித்து.. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கணும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கூட இடைத் தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து தவெக வேட்பாளர்கள் குறித்த கேள்விக்கு “கூச்சமே இல்லாமல் அரசியல் ஆதாயத்திற்காக, தனிப்பட்ட ஆதாயத்திற்காக ராஜினாமா செய்துவிட்டு கட்சி தாவியவர்கள் தான், மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா. அவர்களை அந்த தொகுதி மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“அவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் அதிருப்தி ஏற்பட்டிருக்காதா?” என்ற கேள்விக்கு, “அவர்கள் அதிருப்தி எல்லாம் தவெக-விற்கு ஒரு பொருட்டே கிடையாது. இவர்களுக்கு சீட் கொடுத்ததிற்கு உள்நோக்கமே வேற.. இவர்களுக்கு சீட் கொடுத்தால் தான் அதிமுகவில் இருந்து மத்தவங்களும் வருவாங்க என்றும் அப்படி தாவும் பஞ்சோத்திகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும்” என்றும் பதிலளித்தார். தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. நீங்கள் கட்சி தாவியதற்கு நியாயமான காரணம் என்ன? இவர்களிடம் நியாயமான காரணமே இல்லை.. இவர்களிடம் பேரங்கள் நடத்தப்பட்டது. அந்த பேரத்தின் காரணமாக தான் கட்சி மாறினார்கள். “உண்மையான அதிமுக தவெக தான் என்கிறார்களே அப்படியா..?” பிரசாரத்தின் போது அதிமுகவை ஊழல் சக்தி என விமர்சித்தாரே விஜய்.. இப்போ உண்மையான ஊழல் சக்தி தவெக தான் என்று ஒப்புக்கொள்கிறார்களா? என்றும் விமர்சித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்