அசால்ட்டா லஞ்சம் கேட்ட அதிகாரி..! அலேக்கா தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் ....!

அசால்ட்டா  லஞ்சம் கேட்ட அதிகாரி..!  அலேக்கா தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் ....!
Published on
Updated on
1 min read

தென்காசியில் அரசு ஊழியரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட  குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் ராமசுப்பிரமணியன். இந்நிலையில் ராமசுப்பிரமணியன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய போது அவருக்கு வழங்க வேண்டிய அரியர் பணம்  3 லட்சத்து, 93 ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் 10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். 

அதையடுத்து,  ஊழியர் ராமசுப்பிரமணியன் தன்னிடம் பணம் இல்லை என்றதுடன், தன்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது, ஆகையால் தனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என சீனிவாசனிடம் பலமுறை கேட்டும் அவர்,  "பணம் கொடுத்தால் மட்டுமே உன் பணம் உனக்கு கிடைக்கும்", என பல நாட்களாக கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் ராமசுப்பிரமணியன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.  பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை சீனிவாசனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீசார் ரசாயணம் தடவிய நோட்டுகளுடன், சீனிவாசனை கையும், களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில்,  குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியருக்கே, அவருக்கு சொந்தமான பணத்தை வழங்குவதற்காக உயர் அதிகாரி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு கைதாகியுள்ள சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்த ஆடுவதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com