மின்கட்டண உணர்வை ரத்து செய்யக்கோரி வரும் 20-ம் தேதி மாநிலம் முழுவதும்.... ஒருநாள் கதவடைப்பு போராட்டம்....!
வரும் 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து தொழில் அமைப்புகளின் போசியா கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, மின்சார நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மற்றும் தொழிற்பேட்டைகளுக்கான 99 வருட குத்தகை முறையை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, 23 தொழில் அமைப்புகள் இணைந்த போசியா கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து டான்சியா தலைவர் மாரியப்பன் கூறுகையில்,"கடந்த 8 ஆண்டுகாலம் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் தற்போது உயர்த்தியுள்ளது, தண்டனையாக கொடுத்துள்ளனர். தமிழக அரசு, மின்சார வாரியம் எங்களது கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. தாழ்வு அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோர் 35 ரூபாயை 150 ரூபாயை, 350 ரூபாயை 550 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், தொழில் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் மின்சார கட்டணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவரை 3 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக உயர்த்தியுள்ளது, இரட்டை தண்டனை போல உள்ளது. அதன்படி பணிநேரமானது, காலை 6 மணி முதல் 10 மணி, மாலை 6 மணி முதல் 10 மணி வரை என 8 மணி நேரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், மீட்டர் பொருத்த வேண்டிய பொருப்பு மின்சார வாரியத்திற்கு தான் உண்டு. தொழில் அமைப்புகளை மின்சார வாரியம் ஏமாற்றி வருகிறது. கிலோவாட்டை குறைத்து தர சொன்னால் ரூ.5 லட்சம் பணம் செலுத்த சொல்கின்றனர். மின்சாரம் வேண்டாம் என்றாலும் பணம் கேட்கின்றனர். இரட்டிப்பு தண்டனை எம்.எஸ். எம்.இ., துறைக்கு மின்சார வாரியம் வழங்கியுள்ளது", என்றும் கூறினார். அதோடு, நெசவாளர்களுக்கு மின் சலுகைகள் வழங்கியதை வரவேற்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து, மாற்றாந்தாய் கண்ணோட்டத்தோடு எம்.எஸ்.எம்.இ., பார்ப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் எம்.எஸ்.எம்.இ., மின்சார வாரியத்தால் பாதிப்பில்லை எனக்கூறியது தவறு எனவும் கூறினார். மற்றும், 6 மாதத்திற்கு மேல் காத்திருப்பதாகவும், . எம்.எஸ்.எம்.இ, -யிடம் தங்கள் இலவசம் கேட்கவில்லைஎனவும், தங்களால் முடிந்தளவு செலுத்தும் வகையில் மின் கட்டணத்தை குறைக்கவே கேட்பதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து, தமிழகத்தில் உள்ள 130 சிட்கோ பேட்டைகளில் 24 தொழிற்பேட்டைகளுக்கு 99 வருட குத்தகை முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நில மனைகளை விற்பனைப் பத்திரமாக வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போராடி 30 ஆண்டுகால குத்தகையை பெற்றதாகவும், . எம்.எஸ்.எம்.இ., க்கான நல வாரியம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகாலம் கேட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது, 'ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்' மூலம் அரசு பாலிசி எடுத்து கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட 50 பரிந்துரைகள் செய்துள்ளது. இதனை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதிவழி போராட்டமும், ஒரு நாள் வேலை நிறுத்தமும் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார்.