மேடையிலேயே நடந்த "சால்வை" தகராறு.. வைகோ vs நடிகர் சிவக்குமார் - 'அன்பு' மோதலின் பின்னணி என்ன?

"TVK ஆட்சி அமைந்ததும் நமக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த மாமூல் வராததால் சில IAS அதிகாரிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பெயர் கூட என்னால் சொல்ல முடியும். அது ஒரு போதும் நடக்காது!" என்றார் வைகோ.
மேடையிலேயே நடந்த "சால்வை" தகராறு.. வைகோ vs நடிகர் சிவக்குமார் - 'அன்பு' மோதலின் பின்னணி என்ன?
Published on: 
Updated on: 
2 min read

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் வைகோ-வின் நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு Vaiko in Parliament (நாடாளுமன்றத்தில் வைகோ) என்ற பெயரில் 4 தொகுப்புகள் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்றையதினம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு தனித்தனியாக பொன்னாடை போர்த்தி வரவேற்றார் வைகோ. அப்போது தனக்கு பொன்னாடை வேண்டாம் என நடிகர் சிவக்குமார் அவரிடம் இருந்து வாங்க முயன்றார். ஆனாலும் உறுதியாக அவர் கையில் இருந்து பொன்னாடையை இழுத்து போர்த்திவிட்டார்.

இந்த அன்பு சண்டை சுற்றியிருந்தவர்களை நெகிழ செய்தது.

நிகழ்ச்சியில் பேசிய வைகோ, "TVK ஆட்சி அமைந்ததும் நமக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த மாமூல் வராததால் சில IAS அதிகாரிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பெயர் கூட என்னால் சொல்ல முடியும். அது ஒரு போதும் நடக்காது!" என்றார்.

தொடர்ந்து முதல்வர் விஜய்யுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது குறித்து பேசுகையில், "VS பாபு இறுதி ஊர்வலத்தின் போது முதலமைச்சர் விஜய் அவர்களுடன் நடந்தேன். உங்களால் நடக்க முடியுமா சார் என விஜய் என்னிடம் கேட்டார் இன்னும் 30 கிமீ கூட நடப்பேன் என சொன்னேன். அப்போது பின்னால் இருந்து ஒருவர் என்னை தடுத்தார். அவர் அமைச்சர் என்றோ யார் என்றோ எனக்கு தெரியாது. எல்லா அமைச்சரையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

என்னை தடுத்தவரை நோக்கி 'உன் வேலையை பார்' என பதில் தெரிவித்துவிட்டேன்.

விஜய் அவர்களுடன் இறுதி ஊர்வலத்தில் 2 கிமீ தொலைவுக்கு நடந்ததை செய்தி போட வக்கில்லாத ஊடகங்கள், அமைச்சரிடம் சண்டை போட்டார் வைகோ என செய்தி போடுகிறார்கள். வெட்கமாக இல்லையா?" எனக் காட்டமாக பேசினார்.

மேலும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து பேசியவர், "எங்களுக்கு ஆயுத உதவி செய்து தர வேண்டும் என மேதகு பிரபாகரன் எனக்கு கடிதம் எழுதினார். பிரபாகரன் சார்பாக பாலசிங்கம் மூலம் எனக்கு கடிதம் எழுதினார். பிரபாகரன் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் விபி சிங் அவர்களிடம் தனிமையில் பேசினேன்.

என்னை மத்திய அமைச்சராக ஆக்க நினைத்தவர் VP சிங். அதை நான் மறுத்து, நானே கட்சியில் சங்கடத்தில் உள்ளேன்..இந்த நேரத்தில் எனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என தெரிவித்துவிட்டு, சிங்களத்தில் ஆயுதம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆயுத உதவி செய்து தர வேண்டும் என VP சிங்கிடம் கோரிக்கை வைத்தேன்.

அதற்கு VP சிங் மறுத்தார். நான் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருகிறேன். என்னால் ஒருபோதும் முடியாது என மறுத்தார்.

அதை தொடர்ந்து குறைந்தது மருத்துவ உதவியையாவது செய்துகொடுங்கள் என வலியுறுத்தினேன். அதற்கு ஒப்புக்கொண்டார்." என்றார்.

தொடர்ந்து அரசியல் தலைவர்களுடனாக தனது தருணங்கள் பற்றி பேசிய வைகோ, "என் வீட்டில் பேரறிஞர் அண்ணா நீங்களாக அனைத்து தலைவர்களும் சாப்பிட்டுள்ளார்கள்.

காமராசர், கக்கன், முத்துராமலிங்க தேவர், உட்பட அனைவரும் என் வீட்டில் என் தாய் செய்த சமையலை சாப்பிட்டுள்ளார்கள்.

கருணாநிதி காலை வந்து வீட்டில் சாப்பிட்டு ஓய்வு எடுத்துவிட்டு மாலை சென்றார்.

கவிஞர் கண்ணதாசன் புகழ் குறித்து பேசி வரும் வைகோ, கண்ணதாசன் எழுதிய வனவாசம் அதை தொடர்ந்து அவரா எழுதிய மனவாசம் குறித்து பேச விரும்பவில்லை.

வைகோ இன் பார்லிமெண்ட் ஆங்கில பிரதி வெளியீட்டு விழாவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அழைத்தேன்.

என்னை விட்டுவிடுங்கள் என்னால் அங்கு வந்து பேச முடியாது என விஜய் சொல்லிவிட்டார்.

வைகோ இன் பார்லிமெண்ட் தமிழ் பிரதி வெளியிட்டுக்காவது வருவீர்களா என விஜய் அவர்களிடம் கேட்டேன். நிச்சயம் வருகிறேன் என சொன்னார்.

இதையெல்லாம் அமைச்சர் ராஜ்மோகன் விஜய் அவர்களிடம் சொல்வார் என நம்புகிறேன்." எனப் பேசினார்.

தொடர்ந்து பேசியவர், "விஜய் அவர்களிடம் நான் அடிக்கடி பேசுவது இல்லை. முக்கியமான விஷயங்கள் மட்டும் தான் பேசுவேன். என் தனிப்பட்ட விஷயத்துக்காக எந்த அமைச்சரிடமும் நான் இதுவரை எதையும் கேட்டது கிடையாது.

திமுகவில் இருந்து என்னை தூக்கி எறிந்த போது நெஞ்சு உடைந்து நடுத்தெருவில் நான் நின்ற போது , எனக்கு கட்சி நடத்த அலுவலகம் நடத்த இடம் கொடுத்தவர் கலைப்புலி எஸ் தானு.

நன்றி உணர்வு என் ரத்தத்தில் கலந்து உள்ளது. அதனால் தான் நன்றி மறக்காமல் அவரை இன்று அழைத்து வந்துள்ளேன்.

என் கட்டை வேகின்ற வரை தானு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன் என குறிப்பிட்டார்".

மேடையிலேயே நடந்த "சால்வை" தகராறு.. வைகோ vs நடிகர் சிவக்குமார் - 'அன்பு' மோதலின் பின்னணி என்ன?
கோவை சத்யன் வெளியிட்ட ட்வீட்.. ஆக்ரோஷத்துடன் வெடித்த காயத்ரி ரகுராம் - என்ன நடக்கிறது அதிமுகவில்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்