மழைக்கு ஒரு வாரம் லீவு.. ஆனாலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் அடுத்த மழை எப்போது? -வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

இன்று டெல்டாவில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் தெற்கே இராமநாதபுரம் மாவட்டத்திலும் காரைக்கால் பகுதியிலும் மழை பொழிவு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
One-Week Break from Rain... Yet Warning for Fishermen! What Does the Meteorological Department Say About Chennai's Next Rain?
மழைக்கு ஒரு வாரம் லீவு.. ஆனாலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் அடுத்த மழை எப்போது? -வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?AI Generated
Published on: 
Updated on: 
1 min read

வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில், தீபாவளிக்குப் பிறகு சிறிய இடைவெளி கிடைத்துள்ளது. இந்த வாரம் முழுவதும் பெரிய அளவில் மழை இருக்காது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகக் கணித்திருந்தது. ஆனால், சமீபத்திய தகவல்களின்படி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15ம் தேதி வரை மிகக் குறைவாகவே மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், 13ம் தேதி எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றவர்கள் 12ம் தேதி திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று டெல்டாவில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் தெற்கே இராமநாதபுரம் மாவட்டத்திலும் காரைக்கால் பகுதியிலும் மழை பொழிவு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்பிறகு வருகின்ற 15ம் தேதி மீண்டும் டெல்டாவில் கனமழை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு இந்த வாரம் மிகக் குறைந்த மழைப் பொழிவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 13, 14 தேதிகளில் லேசான மழை இருக்கலாம். அதன்பிறகு 16ம் தேதி வரை மிதமான வெயில் மட்டுமே காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ஒருவேளை எச்சரிக்கை விடுத்தபடி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவானால் மழையை எதிர்பார்க்கலாம்.

One-Week Break from Rain... Yet Warning for Fishermen! What Does the Meteorological Department Say About Chennai's Next Rain?
துறையூரில் வன்முறை, கள்ளக்குறிச்சியில் ஆபாசம்.. அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்த MLAகள் - தலைமை எடுத்த அதிரடி முடிவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.