துறையூரில் வன்முறை, கள்ளக்குறிச்சியில் ஆபாசம்.. அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்த MLAகள் - தலைமை எடுத்த அதிரடி முடிவு!

எதிர்க்கட்சிகள் தமிழக வெற்றிக் கழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை மறுநாள் சென்னைக்கு அழைத்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
TN TVK MLA Controversies: Leadership Summons All MLAs to Chennai Following Outrage
துறையூரில் வன்முறை, கள்ளக்குறிச்சியில் ஆபாசம்.. அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்த MLAகள் - தலைமை எடுத்த அதிரடி முடிவு!
Published on: 
Updated on: 
1 min read

தீபாவளி பண்டிகையோடு விமர்சனச் சூறாவளியில் சிக்கியிருக்கிறது தமிழக வெற்றிக் கழக அரசு. பண்டிகை நாளில் மட்டும் 13 கொலைகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது முதல் சட்டம் ஒழுங்கு குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முறை தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் அட்ராசிட்டிகள் அதிகரிக்கவே, டென்ஷனான தலைமை, அனைத்து MLA-களும் புறப்பட்டு சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது முதல் கட்சியினர் அரசு சார்ந்த மீட்டிங்குகளில் பங்கேற்பது, கிராம சபைகளில் உத்தரவுகளைப் பிறப்பிப்பது, பள்ளிகளில் ரெய்டு செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தலைமை கண்டித்த பிறகு இத்தகைய செயல்கள் குறையத் தொடங்கின.

அதைத் தொடர்ந்து, கில்லி சரத் ஐபிஎல் போட்டியின்போது வெள்ளைப் பொருளை நசுக்கும் பழைய வீடியோ வைரலானது. இப்போது வரை அவர் மீது நடவடிக்கை எடுக்காததற்காகத் தலைமை விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

அமைச்சர் ரமேஷின் உறவினர் முறைகேடாகக் கோயில் நிலத்தைப் பதிவு செய்ததாகச் சர்ச்சை எழுந்தது.

இதுபோக, கட்சிப் பதவி வாங்கித் தருவதாகப் பணம் பெற்றதாகவும், வழக்கறிஞர்களை நியமிக்கப் பேரம் பேசியதாகவும், 125 நாள் வேலைவாய்ப்புத் திட்ட ஒப்பந்தங்களில் 20% கமிஷன் கேட்டதாகவும் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தவெக எம்.எல்.ஏக்கள் மீது எழுந்தன.

நேற்றைய தினம், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர், தொகுதியில் உள்ள குறைகள் குறித்து முறையிட வந்தவரைத் தாக்கியதாக வீடியோ வைரலானது. அதை மறைக்க எடுத்த முயற்சிகளும் அம்பலமாகியிருக்கின்றன.

இதுதவிர, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாகக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சர்ச்சை வெடித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் தமிழக வெற்றிக் கழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை மறுநாள் சென்னைக்கு அழைத்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

ரவிசங்கர் விவகாரத்தில் விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது துணை சபாநாயகர் பொறுப்பு பறிக்கப்பட்டு, தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாக்கு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN TVK MLA Controversies: Leadership Summons All MLAs to Chennai Following Outrage
``கோபம் அவர் மீதா?.. முதலமைச்சர் விஜய் மீதா?" சாமானியரை தாக்கிய தவெக MLA.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
TN TVK MLA Controversies: Leadership Summons All MLAs to Chennai Following Outrage
"கேமராக்களுக்கு ஆக்‌ஷன் செய்வதில் ஆர்வம்.. புத்தகங்களை சரிபார்க்க வேண்டாமா.. " - தவெக குறைகளை அடுக்கிய EPS!
TN TVK MLA Controversies: Leadership Summons All MLAs to Chennai Following Outrage
"இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு" கூட்டணி கட்சியின் எதிர்ப்பும் தவெக அமைச்சர் விளக்கமும்.. குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது ஏன்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.