ஆலந்தூரில் அமைச்சரின் செல்வாக்கு நீடிக்குமா? அதிமுக முந்துகிறதா? - கருத்துக்கணிப்பு முடிவுகள்

கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது...
Alandur
Alandur
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் தொகுதி, படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். தற்போதைய அமைச்சர் தாமு அன்பரசன் மக்கள் மத்தியில் எளிமையானவர் என்று பெயரெடுத்திருந்தாலும், நகர்ப்புற பிரச்சினைகள் அவருக்குச் சவாலாக உருவெடுத்துள்ளன.

இந்தத் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 40.9 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 28.6 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 25 சதவீதமும், முதலியார்கள் 18 சதவீதமும், பிராமணர்கள் 12 சதவீதமும் உள்ளனர். 90 சதவீதத்திற்கும் அதிகமான நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், படித்த இளைஞர்களின் வாக்குகள் மாற்றத்தை விரும்புகின்றனவா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பொதுமக்கள் குறிப்பிடுவது சாலைப் பராமரிப்பு மற்றும் மழைக்கால நீர் தேக்கம் ஆகும். மெட்ரோ ரயில் வசதி இருந்தாலும், உட்புறச் சாலைகள் மோசமாக இருப்பதும், குடிநீர் விநியோகம் சீராக இல்லாததும் மக்களின் அதிருப்திக்குக் காரணமாக உள்ளன. குப்பை மேலாண்மைச் சிக்கல்கள் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் போன்றவை பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத கோரிக்கைகளாகவே நீடிக்கின்றன.

ஆலந்தூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 49 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 32.3 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 33.8 சதவீதமாகச் சற்றே அதிகரித்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 140 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 130 ஆகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 81 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 101 பூத்களாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. சுமார் 32 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, ஆலந்தூரில் திமுக 120 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 80 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 80 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தாலும், தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 6 சதவீதமாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com