
2021 சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பல கட்டங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். எனினும், அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஓபிஎஸ் தற்போது "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறர்.
அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் காட் பாதராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது.
இதனையடுத்து பாஜக மீதான தனது அதிருப்திகளை ஓபிஎஸ் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக வெளிப்படையாகவே பேசியிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இதுவரை நீடிக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். ஆனாலும், ஓபிஎஸ்ஸை கூட்டணியில் ஏற்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாய் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்க்கு தமிழகம் வந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். ஆனால் அவரை சந்திக்க பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்திக்கு உள்ளானது.
பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு!
இந்நிலையில் பொன்னேர் செல்வத்தின் முக்க்கிய ஆதரவாளர்களின் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் “பாஜக ஒரு மதவாதக் கட்சி, வழிக்கத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் சீரழிந்துதான் போகும். வருகிற 2026 தேர்தல் திமுக -தவெக -வுக்கான போட்டியாக அமையப்போகிறது.. விஜய் ஓபிஎஸ் உடன் கரம் கோர்த்தால்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பேசியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி “ஓபிஎஸ் அரசியல் அனாதையாக்கப்பட்டு விட்டார். அதற்கு காரணம் அவரே தான். எடப்பாடியை பொது செயலாளராக்க ஒப்புக்கொண்டிருந்தால் கட்சியும் உடைந்திருக்காது. அதை விடவும் மிக மோசமான ஒரு அவலம், அவர்கள் கையிலெடுத்திருக்கும் திடீர் பாஜக எதிர்ப்பு, மிக கேவலமான ஒரு செயல். அவர்கள் எப்போதும் பாஜக ஆதரவை மட்டுமே கொண்டிருந்தனர். இப்போது திடீரென பாஜக -வை மதவாத கட்சி என கூற கரணம் பிரதமர் மோடி -யை பாக் வாய்ப்பு தரவில்லை என்றுதான், இதை விட மோசமான ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடியுமா?
அதுவும் நீண்ட காலத்திற்கு தீவிரமான பாஜக எதிர்ப்பை எல்லாம் அவரால் பண்ண முடியாது. உடனே அவர்கள் வீட்டு வாசலுக்கு அமலாக்க துறை வந்துவிடும் இது நம்மை விட அவருக்கு நன்றாக தெரியும். தவெக விஜயால் ஓட்டை கலைக்க முடியும், ஆனால் அவரால் வெற்றி காண முடியாது. பண்ட்ருட்டி ராமச்சந்திரன் பேசுவதெல்லாம் மோடி பார்க்க அனுமதிக்கவில்லை என்ற ஆற்றாமையால் பேசுகிறார்.
விஜய் உண்மையிலேயே கறைபடியாத சொந்தக்காரர் ஆவார். ஆனால் ஓபிஎஸ் மாதிரியான ஆட்களுடன் இணையும்போது, விஜய் க்கு கிடைக்கும் லாபங்களை விட நஷ்டம் அதிகம். ஒன்றுபட்ட அதிமுக -உடன் இணைந்தால் அது வேறு ஆனால் ஓபிஎஸ் உன்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது உண்மை. ஆற்றாமையில் தான் ஓபிஎஸ் தரப்பு பேசுகிறது..!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.