
புரட்சி பயணம் பொது கூட்டத்தின் மீது கண் பட்டதால் மழை வந்ததாக ஒ.பன்னீர்செல்வம் தொிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் புரட்சி பயணம் மாவட்டம் தோறும் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டு காஞ்சிபுரத்தில் புரட்சி பயணம் தொடங்கிய போது, திடீரென மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
பொதுக்கூட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒ.பன்னீர்செல்வம் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, பொது கூட்டத்தின் மீது கண் பட்டதால் மழை வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.