chitra and durairaj
chitra and durairaj

தமிழகத்தில் தொடரும் “HONEY TRAP” சம்பவங்கள்.. முன்னாள் காவல் அதிகாரி செய்த மோசடி.. வீடியோவால் சிக்கிய பல பைனான்சியர்கள்!

சித்ரா சுகுமாருடன் நெருக்கமாக இருந்ததை போட்டோ வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்
Published on

பழனியைச் சேர்ந்தவர் சுகுமார் அதே பகுதியில் பைனான்ஸ் கடை வைத்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் உள்ள சித்ரா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

பின்னர் சித்ரா சுகுமாருடன் நெருக்கமாக இருந்ததை போட்டோ வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதலில் சித்ரா கேட்ட பணத்தை கொடுத்துள்ளார் சுகுமார். பின்னர் மீண்டும் மீண்டும் அதிக பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சித்ரா. இதனை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளான சுகுமார் சித்ரா குறித்து காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

இதனை அடுத்து சித்ராவை கைது செய்து விசாரணை நடத்திய காவல்துறை இதை தொடர்புடைய துர்கைராஜ், நாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர் காவல் துறையினர். துர்கைராஜ் மற்றும் நாராயணனின் போனில் சித்ரா பலருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் கிடைத்துள்ளது.

மேலும் இது குறித்து மூவரிடமும் காவல்துறை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. பழனியில் காவல் அதிகாரியை இருந்த சித்ரா விருப்ப ஓய்வு பெற்றதும். பின்னர் பழனியில் உள்ள பைனான்சியர்களை குறிவைத்து முதலில் அவர்களிடம் நெருக்கமாக பழகி அதனை நாராயணன் மூலம் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் பணம் பறிப்பதும்.

சித்ரா கேட்டு பணம் தராதவர்கள் இடம் பழனியில் ரவுடியாக இருக்கும் துர்கைராஜை பயன்படுத்தி அவர்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி பணம் பறிக்க வைப்பதாகவும், அவர்களின் மரியாதைக்கு பயந்து இதுவரை இது குறித்து யாரும் போலீசில் தகவல் தெரிவிக்காததும். விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com