“₹2 கோடி கேட்பேன்” - பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பேரமா? தவெக மாவட்ட செயலாளர் ஆடியோவால் பரபரப்பு!

“யார் வந்து பணம் கொடுத்தாலும் போட்டியிட வாய்ப்பு கொடுப்பேன்" என பேரம் பேசியதாக
TVk audio leak
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளராக ஜி.கே. சங்கர் பொறுப்பு வகித்து வருகிறார். அதே மாவட்டத்தில் பாலசுப்பிரமணி என்பவர் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு தருமாறு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கரிடம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அந்த உரையாடலின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி தற்போது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் "நீ இப்பவே பணம் கொடுக்க மாட்டேங்கிறாய்; ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்பேன், எப்படி கொடுப்பாய்?" எனவும் “யார் வந்து கொடுத்தாலும் போட்டியிட வாய்ப்பு கொடுப்பேன்" என பேரம் பேசியதாக அதில் பதிவாகியுள்ளது.

ஜி.கே. சங்கர்

மேலும், அந்த ஆடியோவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினரை (MLA) தன்னை கேட்காமல் சந்திக்கச் செல்வது குறித்தும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒன்றிய செயலாளரை மாவட்டச் செயலாளர் திட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தளுக்கான ஆயத்தங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆடியோ விவகாரம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com