

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மதார் பதூருதீன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தவெக அரசினை ஆதரித்து பேசும்போது எல்லாம் எதிர்தரப்பினரால் ஏளனப்படுத்தப்பட்டதாகவும், தனது காரை அடித்ததாகவும், விவாத நிகழ்ச்சியில் மத ரீதியாக தனது கேவலப்படுத்தியதகவும் அவர் குறிப்பிட்டார். அந்த சமயத்தில் இதுகுறித்து பேச செல்லும்போது எல்லாம் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தமிழகத்தில் நமது ஆட்சி மலரும் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இசுலாமியர்களின் பாதுகாவலர்கள் என்று கூறினார்கள் ஆனால், இசுலாமியர்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்திற்கு செல்வதற்கு 35 மானியம் கொடுத்தது தவெக அரசுதான் என்று பாராட்டி பேசினார். இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சியினர் எழுந்து நின்று சத்தமிட தொடங்கினர். மேலும், தான் பத்திரிகையில் வரக்கூடிய செய்திகளை கூறவில்லை என்றும் தான் நசுக்கப்பட்டுள்ளதாகவும், கஷ்டப்பட்டுள்ளதாகவும் அவர் பேசினார். இதனையடுத்து, அவைத்தலைவர் தலையிட்டு அவையில் அமைதி நிலவ முயற்சித்தார். மதார் பதூருதீனை அடுத்து பேசிய தமிமுன் அன்சாரி CIA என்ற மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக எதிர்த்து தீர்மானம் செய்யப்பட்டது திராவிட மாடல் ஆட்சி இருந்தபோதுதான் என்று அவர் அவையில் கூறினார்.
மேலும், இசுலாமியர்கள் தீவிரவாதிகள் என்று 5 முறை இங்கு கூறப்பட்டதாக மதார் பதூருதீன் கூறியதை குறிப்பிட்டு பேசினார். ஆனால், அப்படி எந்த ஒரு கருத்தும் இந்த அவையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதனால் அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். சிறைவாசிகள் விடுதலையில் கூட அதிமுக ஆட்சியில் கூட சி. வி. சண்முகம் திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றோர் விடுதலை ஆவதற்கு அவர் துணையாக இருந்ததாகவும், அடுத்து வந்த திமுக ஆட்சியில் இது பற்றிய முறையீடுகளை செய்தபோது அவர்களுக்கெல்லாம் சிறை விடுப்புகளை தந்து வாழ்வில் குறைந்த பட்ச மகிழ்ச்சியை தந்தது திமுக அரசு என்றும் தெரிவித்தார். இவரையடுத்து பேசிய ஜவஹருல்லா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 விழுக்காட்டினை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று குறிப்பிட்டார்.
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக ஏகமனதாக சென்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்று அவர் கூறினார். இசுலாமிய சமூகம் இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு கரணம் திமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட அவர்களை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் அவையில் பேசினார். இதனையடுத்து பேசிய சிறுபான்மை துறை அமைச்சர் 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி பேசினார். இதனையடுத்து பேசிய தாஹிரா, இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறிய கூட்டம்தான் இந்த திமுக என்று பேசியது அவையில் சர்ச்சையானது. இதனையடுத்து, இதனை அவைகுறிப்பில் இருந்து அவைத்தலைவர் நீக்கினார். அவையில் ஏற்பட்ட கடும் அமளியை அடுத்து பேசிய எ. வ. வேலு, இசுலாமியர்களின் பேச்சு மிகவும் 'சென்சிடிவ்' ஆன ஒன்று என்று குறிப்பிட்டு பேசினார்.
மேலும், மதுரை சட்டமன்ற உறுப்பினர் தங்களுடைய தலைவர் இசுலாமியர்களுக்கு செய்ததில்லை புகழ்ந்து பேசுவது இயல்பான ஒன்று என்று கூறியதோடு, ஆனால் இசுலாமியர்களுக்கு ஆதரவாக இருந்தது திமுக அதற்கு ஆதாரமாக இஸ்லாமியர்கள் கட்சி தலைவரே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி பேசினார். இந்நிலையில், அவையில் மீண்டும் கடும் அமளி உண்டானது. அதனை சமாதானம் செய்யும் வகையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். ஆனால், இவர்களுக்குள்ளான வாக்குவாதம் நீண்டுகொண்டே சென்றது. அவர்கள் ஒருமையில் பேசுவதாகவும், இதைத்தான் உங்கள் தலைவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார்களா? என்று பேசியது மேலும் அவையில் சலசலப்பை உண்டு பண்ணியது. இதனையடுத்து குறுக்கிட்ட அவைத்தலைவர், அமைச்சர் ராஜ்மோகனை அமரக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அறிமுக உரையில் பேசிய அமைச்சர் அவர் பேசியதற்கு பொறுப்பேற்று கொள்வார் என்றும், அவர் பேசும்போது 5 முறை குறுக்கிட்டு பேசினார்கள் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
இதையடுத்து பேசிய, கோவி. செழியன், மதம் சம்மந்தப்பட்டு பேசும்போது, வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற வார்த்தைக்கு ஆட்சபனை தெரிவித்தார்களே தவிர அவர் பேசுவதில் தலையிடவில்லை என்றும் அவர் விளக்கப்படுத்தினார்.
இதனையடுத்து மீண்டும் மதார் பதூருதீன் பேசினார். அப்போது, அவர் பேசும் விஷயங்களுக்கு ஆதாரம் வேணும் என்றும் அப்படி இருந்தால் தன்னிடம் காட்டிவிட்டு பேசுமாறும் அவைத்தலைவர் கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிமுன் அன்சாரி, இங்கு பேசியது வெளியே சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும், உணர்ச்சிகரமாக பொறுப்பற்ற முறையிலே பேசுவதை ஏற்கக்கூடாது என்றும் அவர் பேசினார். மேலும், மதார் பதூருதீன் அவைத்தலைவரிடம் தனது ஆதாரங்களை காண்பித்தார். அதன் பின்னர், அவையின் மாண்பு கருதி, மக்களின் நலன் கருதி கொடுத்திருக்கும் ஆதாரங்களையும் தான் ஆய்வில் வைத்துக்கொள்வதாகவும், இதுகுறித்து பேசாமல் மற்ற விஷயங்களுக்கு செல்லலாம் என்றும் அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய மதார் பதூருதீன், தான் ஒரு சமுதாயத்தில் பிறந்தவர் என்றும் 1999-ல் என் சமுதாயத்தை பார்த்து... இஸ்லாமிய மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நாதழுதழுக்க பேசினார். மேலும், தான் தன்னுடைய உணர்வை பேசுவதாகவும், இவை எதுவும் நடக்காதது போல் ஜவாஹருல்லா, தமிமுன் அன்சாரி ஆகியோர் கூறுவதாகவும், அதற்காக அவர் வேதனை படுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறிப்பிட்ட அவைத்தலைவர், 90-களின் நடந்ததை நியாபகப்படுத்தி யாரையும் வேதனைப்படுத்த வேண்டாம் என்று பேசினார். அதன் பின்னர் அவை மானியக்கோரிக்கை குறித்து விவாதிகத் துவங்கியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்