“இனிமேல் அரசியல் பேசமாட்டேன்” - அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு!

அந்த விழாவில் இனிமேல் பாட்டாளி மக்கள் கட்சியின் பணிகளை மகன் அன்புமணி
ராமதாஸ்
Published on
Updated on
1 min read

அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றரை ஆண்டு காலம் இருவரும் நேரில் சந்திக்காமல் இருந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலையும் தனி தனியே எதிர்கொண்டனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ்- சரஸ்வதி திருமண நாளை முன்னிட்டு அன்புமணி குடும்பத்துடன் தைலாபுரம் இல்லம் சென்று சந்தித்தார். அப்போது இருவரும் ஆரத்தழுவி கண்ணீர் விட்ட நிலையில் இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று 88-ஆவது பிறந்த நாளை கொண்டாட விழுப்புரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவில் இனிமேல் பாட்டாளி மக்கள் கட்சியின் பணிகளை மகன் டாக்டர் அன்புமணி பார்த்துக் கொள்வார் என்றும் தெரிவித்தார். மேலும் இனிமேல் அரசியல் பேசமாட்டான்.. அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

விழாவில் பேசிய அவர், “ நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்.. அப்படியென்றால் இனிமேல் அரசியல் பேசமாட்டேன்.. அரசியலில் ஈடுபடமாட்டேன்.. அதற்கு வழிகாட்டமாட்டேன்” என்றும் “ஆனால் வரும் தொண்டர்களை சந்திப்பேன்” என்றும் தெரிவித்தார். "இனிமேல் அரசியல் பணிகளை அன்புமணி பார்த்து கொள்வர்.. அவருக்கு உறுதுணையாக இருங்கள்" என்றும் தொண்டர்களை கேட்டு கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com