

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள் மக்களை இன்னும் மக்களை அலைக்கழித்துக்கொண்டிருக்கின்றன. என்னதான் அதிமுக -திமுக எதிர்ப்பு அரசியலை செய்து வந்தாலும், இரு கட்சிகளும் பிராந்திய காட்சிகள். மாநிலத்தின் உரிமையை, தனித்தன்மையை நிலைநாட்டிய கட்சிகள், அதற்கு கடந்த கால வரலாறு உண்டு. ஆனால் பாஜக பிராந்திய கட்சி இல்லை என்பதை தாண்டி தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான சித்தாந்தங்களை கொண்ட கட்சி என்பது தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் 70 -களிலிருந்து பாஜக மீதான எதிர்ப்பை வைத்தே தமிழக அரசியல் சூழல் இயங்கி வந்துள்ளது. திமுக அழிந்தாலும், அதிமுக அழிந்தாலும் அது இருபக்கமும் சேதாரம்தான்.
இந்த சூழ்நிலையில் “எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான் “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. காரணம் பாஜக -வின் திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் கொள்கைக்கு எதிராக் இருப்பதால் அதை வைத்து வாக்கு சேகரிக்க முடியாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும் அதனால்தான் இன்று வரை அதிமுக - பாஜக கூட்டணி களத்தில், பொருந்தவில்லை எனக்கூறப்படுகிறது. 11 மாதங்களுக்கு முன்னரே, அமைக்கப்பட்டது அதிமுக -பாஜக கூட்டணி. ஆனாலும் இன்று வரை அந்த கூட்டணியில் வேறு கட்சிகள் ஏதும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில்தான், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக -வின் பொதுக்குழு கடந்த, 10 -ஆம் தேதி கூட்டப்பட்டது, செங்கோட்டையனின் பிரிவிற்கு பிறகு எடப்பாடி மிகவும் பலவீனப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த பொதுக்குழு மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அழைப்பை மிகவும் எதிர்பார்த்தவர் ஓபிஎஸ் -தான். ஆனால் அதிமுக பொதுக்குழுவில் ‘அனைத்து அதிகாரங்களையும் இபிஎஸ் -க்கு வழங்கி’ தீர்மானம் நிறைவேற்றி அந்த கதவையும் அடைத்துவிட்டது. இதனால் தனது முடிவை பின்னர் அறிவிக்கிறேன், என ஓபிஎஸ் சொல்லிவிட்டார்.
இந்த சூழலில்தான் கடந்த சனிக்கிழமை அண்ணாமலை “அதிமுக - பாஜக கூட்டணி வலுவடையும்” எனக்கூறியுள்ளார். அதே நேரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும், இதுவரையிலும் கூட்டணி குறித்து நாங்கள் யாரிடமும் பேசவில்லை, என கூறியுள்ளார். இதனால் பாஜக -விற்குள் தேமுதிக இணையும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த நெருக்கடிகளுக்கு இடையே தான் அதிமுக தனது தேர்தல் வேலைகளை துவங்கியுள்ளது. மேலும், இன்று அதிமுக -வில் விருப்ப மனு பெறப்படும் வேலைகள் ஆரம்பித்துள்ளன.
அமித்ஷா போட்ட உத்தரவு!!
இந்த சூழலில் வருகிற ஜனவரி 2வது வாரத்தில் பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் அமர வைக்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் அமித்ஷா தமிழகம் வரும் போது கூட்டணி வடிவம் இறுதி செய்யப்படும்பாஜக விற்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக பணியாற்ற வேண்டும். அதிமுகவிடம் கடந்த தேர்தலை விட இம்முறை அதிக தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதாகவும் அமித்ஷா, நயினார் நாகேந்திரன் சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் NDA -கூட்டணியின் கட்சிகள் பிடிக்கொடுக்காததால் அமித்ஷா இம்மாத இறுதியில் தமிழகம் வருவதாக சொல்லப்பட்டது. இந்த சூழலில்தான் கூட்டணிக்கட்சிகள் பிடிகொடுக்காததால் , அமித்ஷா -வின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.