இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கால்வாயில் பிணமாக மிதந்தது எப்படி!? ‘தமிழகத்தில் தொடரும் காவல் விசாரணை மரணங்கள்..!?

மாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு ...
இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கால்வாயில் பிணமாக மிதந்தது எப்படி!?  ‘தமிழகத்தில் தொடரும் காவல் விசாரணை மரணங்கள்..!?
Published on
Updated on
1 min read

மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதையடுத்து நேற்று மதியம் காவல்துறையினர் விசாரணையின்போது தப்பியோடிய தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அண்ணாநகர் காவல்துறையினர் தினேஷ்குமாரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

இதையடுத்து தினேஷ்குமார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் மீது  விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டி தினேஷ் குமார் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 3 மணி தொடங்கி  இரவு 9 மணி வரை அண்ணா நகர் மற்றும் கே கே நகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று இரவு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக தினேஷ் குமாரின் உடலை வாங்க மறுத்து தினேஷ்குமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இளைஞர் தினேஷ்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் லட்சுமி பிரியா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தினேஷ்குமார் சடலம் மீட்கப்பட்ட இடமான வண்டியூர் வைகையாற்று கால்வாய் பகுதி ஆகிய இடங்களில் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் இளைஞர் தினேஷ்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்களிடமும்  விசாரணை நடத்தினார்.

இதனிடையே இளைஞர் தினேஷ்குமார் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரியும்  சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தினேஷ் குமாரின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடரவுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com