தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 எண்ணிக்கையில் தவெக மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், தனது ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட்டுக்கு தமிழ்நாடு அரசில் புதிய உயர் பதவி வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அது தற்போது சட்டமன்றத்திலும் அந்த எதிர்ப்பு குரல்கள் ஒலித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து வந்த நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது ஆதரவினை தெரிவித்து வந்த வேளையில் தேமுதிக-வை சேர்ந்த பிரேமலதா தனது கருத்தினை முன்வைத்தார். காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவினை தொடர்ந்து தேமுதிக சார்பில் பிரேமலதா பேசினார். 717 மதுக்கடைகளை மூடியதற்கும், பெண்கள் பாதுகாப்பிற்க்கு முன்னுரிமை அளித்ததற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு முகத்தை மூடி சென்றது யார்? என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், "அரசு குடும்பத்தில் இருந்து வந்தவன் அல்ல, மாறாக நானும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன்தான்" என்று கூறினீர்கள், ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக 'குதிரை பேரத்தை' இந்த அரசு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்று வேதனையுடன் கூறுவதாக பிரேமலதா கூறினார். இதனையடுத்து, முதல்வரின் ராஜகுருவாக தேர்ந்தெடுத்துள்ள ராதன் பண்டிட் என்பவரை அரசு சிறப்பு அதிகாரியாக, அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
"அவர் ராஜகுருவாக உங்களுக்கு இருந்தால் தனிப்பட்ட முறையில் அவரை வைத்துக் கொள்ளுங்கள்" என்றும் அவர் கூறினார். மேலும், மக்கள் இளைஞர்களை நம்பி வாக்களித்துள்ளார்கள், அப்படியென்றால் இந்த இளைஞர்களுக்கு என்ன உதாரணத்தை நீங்கள் சொல்கிறீர்கள்? என்ன வரலாற்றை சொல்ல விரும்புகிறீர்கள்? வருங்கால இளைஞர்களுக்கு இதன் மூலம் என்ன செய்தியை நீங்கள் சொல்ல வருகிறீர்கள்? என்று முதல்வர் விஜய்யை நோக்கி சரமாரியாக தனது கேள்விகளை முன்வைத்தார் பிரேமலதா. இவரை அடுத்து, மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பேசிய தமீமுன் அன்சாரி, இந்த ஜோதிட விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கே சேரன் செங்குட்டுவன் குறித்த ஒரு குட்டிக்கதையை கூறினார். ஜோதிடத்தால் ஆட்சி செய்ய தகுதி இல்லாதவர் என்று கூறப்பட்ட சேரன் செங்குட்டுவன் 55 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தார் என்பது வரலாறு என்று அவர் கூறினார். முதல்வர் விஜயின் நம்பிக்கையை மதிப்பதாகவும் ஆனால் அந்த நம்பிக்கையை அரசு மயமாக்குவதை எதிர்பதாகவும் அவர் கூறினார். மேலும், ஜோதிடத்தை அரசுமயமாக்குவதை ஏற்கமுடியாது என்றும் அவர் ஆணித்தரமாக கூறினார்.
மேலும், விசிக சார்பில் பேசிய வன்னி அரசு, ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல், அறிவியலை வளர்க்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று சூசகமாக கூறினார். இதனையடுத்து தவெக தலைவரும், முதல்வருமான விஜய் இதனைக்குறித்து மறுஆலோசனை செய்வதாகவும் அவர் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.