“சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்த தவெக” - 144 எம்.எல். ஏக்கள் விஜய்க்கு ஆதரவு.. வெற்றியுடன் முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பு!

எதிர்க்கட்சிகள் சிலர் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் மற்றும் அரசியல் மாற்றங்களை கடுமையாக விமர்சித்தனர்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on
Updated on
1 min read

தமிழக அரசியலில் இன்று மிக முக்கியமான நாளாக சட்டசபை வரலாற்றில் பதிவாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்தது. முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு மீது ஆளுநரின் உத்தரவின்படி இன்று தமிழக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காலை முதலே சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு வருகை தந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.சபாநாயகர் JCD பிரபாகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். தனது உரையில், “இது ஒரு சாதாரண அரசியல் வெற்றி அல்ல; தமிழக மக்களின் மாற்றத்திற்கான தீர்ப்பு. மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் ஆட்சி வழங்குவோம்” என்று தெரிவித்தார். அவரது உரைக்கு ஆளும் தரப்பில் இருந்த எம்.எல்.ஏக்கள் மேசைத் தட்டிக் கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு மொத்தம் 144 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தெரிவித்தனர். மேலும் 22 எம்.எல். ஏக்கள் எதிர்ப்பும், 5 எம். எல்.ஏக்கள் நடுநிலையும் தெரிவித்தனர். இதன் மூலம் சட்டசபையில் தெளிவான பெரும்பான்மையை நிரூபித்த தமிழக வெற்றி கழக அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் சிலர் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் மற்றும் அரசியல் மாற்றங்களை கடுமையாக விமர்சித்தனர்.

குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உறுப்பினர்கள் ஆளும் அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியதால் சட்டசபையில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் சட்டசபை வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது, தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகக் கோஷங்களை எழுப்பி கொண்டாடினர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் திராவிட முன்னேற்ற கழகத்தினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com