“ஒரு சினிமா கூத்தடியை கட்டிப்பிடிக்க அனுமதிக்கிறீங்களே?” - தவெக கல்வித்திருவிழாவை கொச்சையாக விமர்சித்த வேல்முருகன்!

"இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டாப் பயலுக.. நான் நடிகனை குறை சொல்ல மாட்டேன்"
velmurugan
velmurugan mmtv
Published on
Updated on
2 min read

விஜய்-ன் கல்வித்திருவிழா!

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். விஜயின் இந்த  முயற்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் கையால் பரிசு பெற வேண்டும் என்றும், விஜய்யை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெற்றோர் தரப்பிலும் இதற்கு நல்ல இசைவான பார்வை உண்டு. 

இந்த நிலையில் 2025 கல்வி ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் சென்னை,கடலூர்,  அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், பெரம்பலூர், தேனி, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 88 தொகுதிகளில் உள்ள 600 மாணவ மாணவிகளுக்கு இன்று (மே 30) விருது வழங்கப்பட்டது. 1பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கும், மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

அதேபோல கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் விஜய்யின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று இரண்டாவது கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து வருகிறார். விஜய்யை சந்திக்க வரும் மாணவர்கள் விஜயோடு குழு புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். மேலும் மாணவர்களுடன் ஹார்ட்டின் சிம்பல் காட்டுவது, விஜய் படங்களில் வருவது போல போஸ் கொடுப்பது, கட்டி பிடிப்பது, டான்ஸ் ஆடுவது அன்பு மிகுதியால் முத்தம் கொடுப்பது என மாணவ மாணவிகள்  விஜயின் மீதான தங்கள் அன்பை இவ்வாறு வெளிப்படுத்தி வந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கொச்சையாக பேசிய வேல்முருகன்!

இந்த நிலையில்தான்  விஜய்யின் இந்த மாணவர் சந்திப்பை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தலைவரான வேல்முருகன். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது .." இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டாப் பயலுக.. நான் நடிகனை குறை சொல்ல மாட்டேன். ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான். இன்னும் ஓரிரு மாதங்களில் பிளஸ் டூ முடித்து, டிகிரி முடிக்க இருக்கும் கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு.. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண்ணை, நாளை மாற்றான் வீட்டுக்கு மனைவியாக போகிற பெண்ணை.. அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படி செய்யக்கூடாது: என பேசி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com