பொடுகு தொல்லை பாடாய்படுத்துதா? இதைப் பண்ணுங்க!

பொடுகு (Dandruff) என்பது உச்சந்தலையில் (scalp) செத்த செல்கள் செதில் செதிலாக உதிர்ந்து, வெள்ளைத் தூள்களாகத் தெரிவது. இது ஒரு பொதுவான பிரச்சனை, ஆனா சிலருக்கு இது அரிப்பு, எரிச்சல், தோல் சிவப்பு மாதிரியான பிரச்சனைகளையும் உருவாக்குது.
dandruff
dandruff
Published on
Updated on
3 min read

பொடுகு... இந்த ஒரு வார்த்தையை கேட்டாலே, தலை அரிப்பு, தோள்பட்டையில் விழும் வெள்ளைத் தூள்கள், தர்மசங்கடம், இதெல்லாம் நினைவுக்கு வருது, இல்லையா? சிறுவயசு பசங்க முதல் பெரியவங்க வரை, ஆண், பெண் பாகுபாடு இல்லாம, பொடுகு தொல்லை பலரையும் பாடாய்படுத்துது. இந்த பிரச்சனை ஆரம்பத்துல சின்னதா இருந்தாலும், கண்டுக்காம விட்டா முடி உதிர்வு, தோல் நோய்கள், முகப்பரு, காது பின்னாடி எரிச்சல் வரைக்கும் கொண்டு போய்டுது.

பொடுகு (Dandruff) என்பது உச்சந்தலையில் (scalp) செத்த செல்கள் செதில் செதிலாக உதிர்ந்து, வெள்ளைத் தூள்களாகத் தெரிவது. இது ஒரு பொதுவான பிரச்சனை, ஆனா சிலருக்கு இது அரிப்பு, எரிச்சல், தோல் சிவப்பு மாதிரியான பிரச்சனைகளையும் உருவாக்குது. பொடுகு வருவதற்கு பல காரணங்கள் இருக்கு:

வறண்ட சருமம்: குளிர்காலத்துல, உச்சந்தலை வறண்டு போய், இறந்து போன செல்கள் அதிகமா உதிருது. இது பொதுவான பொடுகு காரணம்.

பூஞ்சை தொற்று: Malasseziaனு ஒரு பூஞ்சை உச்சந்தலையில் இயற்கையாகவே இருக்கு. ஆனா, இது அதிகமா வளர்ந்தா, சருமத்தை எரிச்சல்படுத்தி, பொடுகு உருவாகுது.

மன அழுத்தம்: மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் பொடுகு வருவதற்கு முக்கிய காரணங்களா இருக்கு.

தவறான உணவு பழக்கம்: ஊட்டச்சத்து குறைவு, கொழுப்பு நிறைந்த உணவு, பால், வெண்ணெய் மாதிரிய உணவுகள் பொடுகை அதிகப்படுத்தலாம்.

சுத்தமின்மை: தலையை அடிக்கடி கழுவாம இருந்தா, வியர்வை, அழுக்கு தேங்கி, பொடுகு வருது.

ரசாயன பொருட்கள்: அதிகமா ஷாம்பு, ஹேர் ஸ்ப்ரே, ஜெல் மாதிரிய ரசாயன பொருட்கள் உபயோகிச்சா, உச்சந்தலை எரிச்சல் அடையுது.

தோல் நோய்கள்: சொரியாஸிஸ் (Psoriasis), எக்ஸிமா (Eczema) மாதிரிய தோல் நோய்கள் பொடுகு மாதிரி தோல உதிர வைக்குது.

பொடுகு ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு பரவாது, ஆனா ஒருத்தர் உபயோகிச்ச சீப்பு, தலையணை, துண்டு மாதிரியவற்றை பகிர்ந்து உபயோகிச்சா, தொற்று பரவ வாய்ப்பு இருக்கு.

இயற்கையான வீட்டு வைத்தியங்கள்

வீட்டுல இருக்கற பொருட்களை வச்சு, பொடுகு தொல்லையை எளிதாக குறைக்கலாம். இதோ, சில பாட்டி வைத்தியங்கள், எல்லாம் அறிவியல் ஆதாரத்தோட இருக்கு:

வேப்பிலை + துளசி:

வேப்பிலையும், துளசி இலையும் மைய அரைச்சு, உச்சந்தலையில் தேய்ச்சு, 20 நிமிஷம் ஊற வச்சு, குளிர்ந்த நீர்ல கழுவுங்க.

வேப்பிலைல இருக்கற கிருமி நாசினி (antibacterial) பண்பு, பூஞ்சையை அழிச்சு, பொடுகு குறையுது.

வாரம் 2 முறை இதை செஞ்சா, நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை + தேங்காய் எண்ணெய்:

2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து, உச்சந்தலையில் மசாஜ் பண்ணுங்க. 20 நிமிஷம் ஊற வச்சு, ஷாம்பூ போட்டு கழுவுங்க.

எலுமிச்சைல இருக்கற வைட்டமின் C, கிருமிகளை அழிச்சு, முடி வளர்ச்சிக்கு உதவுது. தேங்காய் எண்ணெய் ஈரப்பதத்தை தருது.

இதை வாரம் 1-2 முறை செஞ்சு பாருங்க, பொடுகு பறந்து போய்டும்!

வெந்தயம்:

ஒரு கைப்பிடி வெந்தயத்தை இரவு முழுக்க தண்ணீர்ல ஊற வச்சு, காலையில மசிச்சு, தலையில தேய்ச்சு, 30 நிமிஷம் ஊற விடுங்க. பிறகு குளிர்ந்த நீர்ல கழுவுங்க.

வெந்தயம் உடல் உஷ்ணத்தை குறைச்சு, பொடுகை கட்டுப்படுத்துது.

வாரம் 2 முறை இதை செஞ்சா, உச்சந்தலை சுத்தமாகும்.

தயிர் + எலுமிச்சை:

ஒரு கப் தயிரோட சிறிது எலுமிச்சை சாறு கலந்து, உச்சந்தலையில் தடவி, 30 நிமிஷம் ஊற வச்சு, ஷாம்பூவுல கழுவுங்க.

தயிர் உச்சந்தலையை குளிர்ச்சியாக்கி, பூஞ்சை தொற்றை குறைக்குது.

இதை வாரம் ஒரு முறை செஞ்சு பாருங்க, பொடுகு குறையும்.

கற்றாழை:

கற்றாழை மடல்களை வெட்டி, உள்ள இருக்கற ஜெல்லை எடுத்து, உச்சந்தலையில் தடவி, 30 நிமிஷம் ஊற வச்சு, கழுவுங்க.

கற்றாழைல இருக்கற கிருமி நாசினி பண்பு, பொடுகை குறைச்சு, முடிக்கு ஈரப்பதம் தருது.

வாரம் 2-3 முறை இதை செஞ்சா, உச்சந்தலை ஆரோக்கியமாகும்.

அறிவியல் அடிப்படையிலான தீர்வுகள்

வீட்டு வைத்தியம் பலருக்கு வேலை செஞ்சாலும், சிலருக்கு பொடுகு தீவிரமா இருக்கலாம். அப்போ, அறிவியல் அடிப்படையிலான சிகிச்சைகள் உதவுது:

பொடுகு எதிர்ப்பு ஷாம்பு:

Ketoconazole, Selenium Sulfide, Zinc Pyrithione, Salicylic Acid மாதிரிய மருந்து பொருட்கள் இருக்கற ஷாம்பு உபயோகிக்கலாம். இவை பூஞ்சை தொற்றை குறைக்குது.

வாரம் 2-3 முறை இந்த ஷாம்பு உபயோகிச்சு, 5 நிமிஷம் தலையில் வச்சு, பிறகு கழுவுங்க. ஆனா, இதற்கு மருத்துவர்களின் ஆலோசனைகள் தேவை.

டீ ட்ரீ ஆயில்:

டீ ட்ரீ ஆயில்ல அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) மற்றும் கிருமி நாசினி பண்பு இருக்கு. இதை ஷாம்புவோட சேர்த்து உபயோகிக்கலாம்.

2-3 துளி டீ ட்ரீ ஆயிலை ஷாம்புவோட கலந்து, தலையில் தேய்ச்சு, 5 நிமிஷம் விட்டு கழுவுங்க.

ஆயுர்வேத மருந்துகள்:

ஏலாதி தைலம், வெட்பாலை தைலம், ஊமத்தையிலை தைலம் மாதிரிய ஆயுர்வேத எண்ணெய்கள் பொடுகு குறைக்க உதவுது.

மருத்துவ சிகிச்சை:

பொடுகு தீவிரமா இருந்து, அரிப்பு, சிவப்பு, தோல் உரிவு இருந்தா, தோல் மருத்துவரை (dermatologist) பார்க்கணும்.

சொரியாஸிஸ், எக்ஸிமா மாதிரிய நோய்கள் இருக்கானு பரிசோதனை செஞ்சு, ஸ்டெராய்டு க்ரீம், மருந்து மாத்திரைகள் தரலாம்.

பொடுகு வராம தடுக்க என்ன செய்யலாம்?

பொடுகு முற்றிலும் நீங்க, வாழ்க்கை முறையில சில மாற்றங்கள் செய்யணும்:

தலை சுத்தம்:

வாரம் 2-3 முறை தலையை கழுவுங்க. சூடான தண்ணீர் உபயோகிக்காம, மிதமான அல்லது குளிர்ந்த தண்ணீர் உபயோகிக்கணும்.

ஒருத்தர் உபயோகிச்ச சீப்பு, துண்டு, தலையணையை மத்தவங்க உபயோகிக்கக் கூடாது.

ஆரோக்கிய உணவு:

புரதம், வைட்டமின் B, C, E, ஜிங்க் (Zinc) நிறைந்த உணவு (பழங்கள், காய்கறி, மீன், கொட்டை வகைகள்) சாப்பிடுங்க.

கொழுப்பு நிறைந்த உணவு, பால், நெய், வெண்ணெய் அதிகமா சாப்பிடறதை குறைங்க.

மன அழுத்தத்தை குறைக்க:

யோகா, தியானம், உடற்பயிற்சி மூலமா மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க.

தூக்கம் முக்கியம், ஒரு நாளுக்கு 7-8 மணி நேரம் தூங்குங்க.

ரசாயன பொருட்களை தவிர்க்க:

அதிக ரசாயனம் உள்ள ஷாம்பு, ஹேர் ஜெல், ஸ்ப்ரே உபயோகிக்காம, இயற்கையான பொருட்கள் (சீயாக்காய், வேப்பிலை சோப்) உபயோகிக்கலாம்.

எண்ணெய் உபயோகம்:

பொடுகு இருக்கற்போ, எண்ணெய் தேய்க்கறது சிலருக்கு பொடுகை அதிகரிக்கலாம், இதனால மருத்துவர் ஆலோசனை பெறுங்க.

ஆனா, வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்ச்சு, உச்சந்தலைய மசாஜ் பண்ணி, குளிர்ந்த நீர்ல கழுவலாம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com