
நமது மாலைமுரசு தொலைக்காட்சியில் நேற்று(ஜூலை 28) “பிரதமரின் தமிழக வருகை கூட்டணி நகர்வுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன” என்பதை மையமாக வைத்து நடந்த, நெற்றிக்கண் விவாத நிகழ்ச்சியில் “எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் விதமாகத்தான், தனிப்பட்ட சந்திப்பிற்கு பிரதமர் அனுமதி வழங்கவில்லை, அவருடைய சமூக வலைதள பதிவுகள் இதை தான் கூறுகிறது, என எடுத்துக் கொள்ளலாமா?” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு, பதிலளித்த அரசியல் விமர்சகர் பொன் வில்சன், “நீங்கள் சொல்வது போல எடுத்து கொள்ளாமல், ஒரு மூன்று செயல்களை மையமாக வைத்து எடுத்து கொள்ளலாம். முதலாவது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இடையே மிகப்பெரிய மோதல், கருத்து வேறுபாடு என்பது வெளிப்படையாக தெரிகிறது, ஏனெனில் அமித்ஷா எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார்.
இதை மோடி ஏற்றுக்கொள்ளவில்லை, அப்போது அவர்களுக்குள் பிரதமர் பதவிக்கு போட்டி இருக்கலாம். இரண்டாவது இந்த சட்டமன்றத் தேர்தலை மோடி முக்கியமாக கருதவில்லை, மேலும் தமிழ்நாட்டையே அவர் முக்கியமாக கருதவில்லை என்ற கருத்துதான் தற்போது இருக்கிறது. அதிமுக கடந்த தேர்தலை முக்கியமாக கருதவில்லை என்றால் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை, இவர்கள் தற்போது கூட்டணி வைத்தும் முக்கியமாக கருதவில்லை. அப்போது பாஜக துரோகம் செய்ய நினைக்கிறதா? என்ற பார்வை தானே உள்ளது, இப்படி இல்லை என்பதை தான் நான் சொல்ல வருகிறேன்.
வருங்காலத்தில் ஒரே மேடையில் மோடியும், எடப்பாடியும் எத்தனை மணி நேரம் நிற்க போகிறார்கள், ஒன்றாக இருக்கப் போகிறார்கள் என்பது தெரியாது. அன்று இதை நாம் தவறு என்று சொல்வோமா? இப்போது பிரதமர் மோடி வந்தது அரசு முறை பயணம், அரசியல் இருக்கிறதா என்றால், பாஜகவிற்கான அரசியல் இருக்கிறது, மத்தியில் ஆளக்கூடிய பாஜக “நாங்கள் தமிழ்நாட்டிற்கு இதை எல்லாம் செய்திருக்கிறோம்” என்று சொல்ல கூடிய அரசியல், இது இரண்டிலுமே கூட்டணி அரசியல் குறித்தும், எதிர்ப்பு அரசியல் பற்றியும் பெரிய அளவில் எதுவும் தெரிவிக்கவில்லை. கட்சியை பற்றியோ, கூட்டணியை பற்றியோ பேச வரவில்லை, இது தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்க வந்த அரசியல் முறை பயணம்.
நீங்கள் சொல்வது போல ஓபிஎஸ்-யை சந்தித்து இருக்கலாம், ஏன் சந்திக்கவில்லை என்பது அவர்களுக்குத்தான் தெரியும். இபிஎஸ்-க்கு மரியாதை கொடுக்கவில்லை என்கிறார்கள், அப்படி இல்லை ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை மோடி கொடுத்து சந்தித்து இருக்கிறார். இபிஎஸ் உடன் பிரதமர் ஐந்து நிமிடம் பேசி இருந்தால். வெறும் ஐந்து நிமிடமா? அரை மணி நேரம் பேசியிருந்தால், வெறும் அரை மணி நேரமா? என்ற குறை அனைவருக்கும் இருக்கும், இது அரசு பயணம் மட்டும் தான். நீங்கள் கேட்டது போல இந்த வருகையால் அரசியலில் மாற்றம் இருக்குமா என்றால், இருக்காது.
2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்ததை நாகரிகமாக கடந்து சென்றீர்களா? எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் “GO BACK MODI” என்றார், மேலும் உதயநிதி “GET OUT MODI” என்றார், இன்று ஆட்சியில் இருப்பதால் வெள்ளை கோடி பிடித்து கொண்டு நிற்கிறார்கள். யாருக்கு கூட்டணியை அழைக்க நிர்பந்தம் இருக்கிறது? ஸ்டாலினுக்கு என்ன நிர்பந்தம் இருக்கிறது? இன்னும் எங்கள் கூட்டணியில் சில காட்சிகள் வந்து சேரும் என்பதற்கு. எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளை வலுவிழக்க செய்யமுடியுமா என்று ஆளும் கட்சி பேசுவதும், ஆளும் கட்சியின் கூட்டணியை வலுவிழக்க செய்யமுடியுமா என எதிர்க்கட்சிகள் பேசுவதும் அரசியலில் இயல்பு.
அனைத்து மதத்தையும் ஒன்றாக பார்க்க கூடிய கட்சி அதிமுக எம்ஜிஆர் காலத்தில் இருந்தே, ஆன்மீக அரசியல் என்றால் அனைத்து மதத்தையும், அனைத்து சமயங்களின் கோட்பாடுகளையும் சரி சமமாக நடத்த வேண்டும், என்ற கொள்கையை கடைபிடிப்பது தான் அதிமுக. கூட்டணிக்கு என்றும் விசுவாசமாக இருக்க கூடிய கட்சி அதிமுக, மனக்கசப்பு ஏற்பட்டு பிரச்சனை வந்தால் பிரியுமே தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் பாஜக, அதிமுக கூட்டணி பிரியாது” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.