
நேற்று (ஜூலை 21) நமது மாலை முரசு தொலைக்காட்சியின் "நெற்றிக்கண்" நிகழ்ச்சியில், அதிமுகவின் சீனியர் லீடர்களில் ஒருவரான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தது குறித்து நடந்த விவாத நிகழ்ச்சியில், அதிமுகவின் சார்பாக பேசிய சேலம் மணிகண்டன், "சிறுபான்மையினர் மக்கள் அம்மா காலத்திலேயே அதிகமாக அதிமுகவிற்கு வாக்கு அளிக்கும் வழக்கம் இல்லை, திமுகவிற்கே பெரும்பான்மை அளித்தனர். மதமாற்றம் தடை சட்டம், ராமர் கோவில் ஆதரவு, இப்படி இருந்ததால் சிறுபான்மையினரின் 100 சதவீத ஓட்டுகளில் 30 சதவீத ஓட்டுகள் மட்டுமே அதிமுகவிற்கு கிடைத்தது, மற்ற 70 சதவீத ஓட்டுகள் திமுகவிற்கே சென்றது. பாஜக மட்டுமில்லை மத்தியில் ஆட்சியில் இருக்கும் எந்த கட்சியாக இருந்தாலும், மாநில கட்சிகளை ட்விஸ்ட் செய்து பார்ப்பார்கள்.
பாஜகவை விட இந்துத்துவத்தை தூக்கிப் பிடிக்கும் கட்சி உத்தவ் தாக்கரே கட்சி. அவர்களுடனே காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது, நீங்கள் போய் மதத்தை பற்றி பேசலாமா? பாஜகவை முதுகில் குத்தியது மாயாவதி.. அந்த வரலாற்றை மறைத்து பேசுறாங்க, 95 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்து குற்றம் செய்ததது காங்கிரஸ் கட்சி. ஊழல் காரணமாக திமுகவை இரண்டு முறை கலைத்த கட்சி காங்கிரஸ். தமிழ் மகன் உசேன் என்ற அண்ணா திமுகவின் அவைத் தலைவர் ஒரு ஏழை இஸ்லாமியர்.. அவருக்கு தெரியாதா இது, சிறுபான்மையினருக்கு எதிரானது என்று?.. அன்வர் ராஜா கட்சி கொள்கையை ஆதரித்தவரா? அன்வர் ராஜா பாய்.. திமுகவிற்கு உங்கள் வீட்டு பாயம்மா கூட ஓட்டு போட மாட்டார்கள்” என பேசியுள்ளார்.
அதற்கு பதிலளித்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி, "அன்வர் ராஜா அவர்கள் தான் எடுத்த முடிவை தெளிவாக சொல்லும் போது, இவர்கள் அதை சிறுபான்மையினர் கோணத்தில் எடுத்துச் செல்கிறார்கள். மணிகண்டன் பேசிய போது, "அன்வர் ராஜா பாய்.. உங்க விட்டு பாயம்மா கூட இத ஏத்துக்கமாட்டாங்க” என்று மதச்சாயம் பூசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இப்போது மட்டுமில்லாமல் எப்போதும் மதத்தை வைத்து பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். மற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டிப்பார்ப்பது பாஜகவிற்கு காமெடியாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் வலி தெரியும். அன்வர் ராஜாவை மத காரணம் கொண்டு பேசுவதற்கு உங்களை யார் தூண்டிவிட்டது மணிகண்டன்? அவர் தெளிவாக சொல்லிவிட்டார் மதத்திற்கும் அவர் வெளியே வந்ததற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று! இதை ஏன் இங்கு பதிய வைக்கிறேன் என்றால், பிரச்சனையை மடை மாற்ற பார்க்கிறார்கள். ஏனெனில் அவர்களின் கூட்டணி அப்படிப்பட்டது.
ஜெயலலிதா கட்சியில் சிறுபான்மையினர் அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை என்றார்கள், இன்றைய சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய கட்சி ஜவாஹிருல்லா, ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து தான் எம்எல்ஏ ஆனார். அதே போல அஸ்லாம் பாஷா எம்எல்ஏ ஆனார். ஜெயலலிதா அவர்கள் இறந்த போது சிறுபான்மையினர் மக்கள் துடித்தது போல யாரும் துடித்தது இல்லை! காரணம் இவர்களின் இறப்பை பாஜக பயன்படுத்தி விடுமோ என நாங்கள் பயந்தோம். அன்வார் ராஜா அவரது நிலைப்பாட்டை மிக தெளிவாக சொல்கிறார், ஜெயலலிதா கூட்டணி வைத்தபோதும், திமுக கூட்டணி வைத்தபோதும் பாஜக இப்படி இல்லை, எப்படி இருந்தது என்றால் வாஜ்பாய் இருக்கும் போது, "எங்களுக்கும் RSS- கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது” என்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தற்போது பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில கட்டிய ராமர் கோவிலுக்கு சம்மந்தமே இல்லாத மோடி அதை திறந்து வைக்கிறார். அவர் இந்துக்களுக்கு மட்டும் இல்லை எல்லா மக்களுக்கும் பிரதமர், கட்சிகளை உடைக்கும் பாஜக, ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் போன்றவர்களை உருவாக்கி கட்சிகளை உடைத்தது.
கர்நாடகாவை பாஜக, "IT IS THE GATEWAY OF SOUTH INDIA" என சொல்வார்கள். எந்த எந்த இடத்தில் எல்லாம் மதவாதம், மதச்சார்பின்மைக்கு இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் பாஜக வந்து விடும். சிறுபான்மையினர் ஓட்டு ஜெயலலிதா காலத்தில் வந்ததில்லை என சொல்வதன் மூலம் அவர்கள் எங்களுக்கு சிறுபான்மையினர் ஒட்டு தேவை இல்லை என்கின்றார்கள். இதன் மூலம் இப்படி ஒரு மதவாத கட்சியில் இருப்பதற்கு பாஜகவிற்கு செல்லலாம் என்ற எண்ணத்தை கொண்டு வர நினைக்கின்றனர். பிற்காலத்தில் இது திமுக VS பாஜக என மாற்ற நினைக்கின்றனர்.
அதற்காகத்தான் தமிழ்நாட்டில் முருகர் மாநாடு நடத்தப்பட்டது. பாஜகவை நெகடிவ் ஃபோர்ஸ் என்று சொன்ன அன்வர் ராஜா, மேலும் “எம்ஜிஆர் ஒரு கொள்கையுடன் இருந்தார், ஜெயலலிதாவிற்கு ஒரு கொள்கை இருந்தது. ஆனால் எடப்பாடியின் கொள்கை தனி கொள்கை. இதன் மூலம் தனது சுயநலத்துக்காக எடப்பாடி கட்சியை அடமானம் வைக்கிறார் என்கிறார். தெளிவாக தெரிகிறது, பாஜக தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை அழித்து விடும் என்று; இது தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிற்கு அடமானம் வைத்திருக்கிறார். பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை குறிப்பாக சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை." என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.